தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி

Go down

 பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி Empty பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி

Post  ishwarya Mon Mar 25, 2013 2:36 pm

சென்னை, ஜூலை 2: கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் கூறினார்.

சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் "லிவர் கிளினிக்ஸ் 2012' என்ற கல்லீரல் குறித்த கருத்தரங்கைத் திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து அரசுப் பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்களில் கல்லீரல் நோய்க்கான மருத்துவ நிபுணர்களின் தேவை அதிகமாக உள்ளது.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கென தனித் துறை உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் நோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் இதுவரை 850 பேருக்கு கல்லீரல் நோய் தொடர்பான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதேபோல அரசு பொது மருத்துவமனை கல்லீரல் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசு தொடர்ந்து செய்யும்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் துறையின் பட்ட மேல்படிப்பான "டாக்டரேட் மெடிசின்' இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்பதலுடன் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் கல்லீரல் நோய்க்கான மருத்துவ நிபுணர்களின் தேவைக்குத் தீர்வு காண முடியும் என்றார் வி.எஸ்.விஜய்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கனகசபை, கல்லீரல் துறை தலைவர் டாக்டர் கே.நாராயணசாமி, இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னாள் உறுப்பினர் டாக்டர் எஸ்.சே.சரைன் ஆகியோர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum