விலை குறைந்து வருவதால் மூலதனத்தை
Page 1 of 1
விலை குறைந்து வருவதால் மூலதனத்தை
கடந்த ஆறு தினங்களாக பங்கு வியாபாரம் தொடர்ந்து மந்தமாக உள்ளது. இதனையடுத்து, திறம்பட செயல்படும் பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்துள்ளது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி டாட்டா பவர், எச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ், பாம்பே டையிங், ஜே.கே. பேப்பர் உள்ளிட்ட பல கம்பெனிகளின் நிறுவனர்கள் பங்குகளை வெளியிருந்து வாங்கி தமது நிறுவனத்தில் பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளனர்.
டாட்டா பவர்
மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் டாட்டா பவர் நிறுவனத்தின் 20 லட்சம் பங்குகளை ரூ.20 கோடிக்கு டாட்டா ஸ்டீல் நிறுவனம் கடந்த 20–ந் தேதி வாங்கியது. பாம்பே டையிங் நிறுவனத்தின் 40,000 பங்குகளை அதன் நிறுவனர் நெஸ்வாடியா ரூ.37 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.
எச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் 44.69 லட்சம் பங்குகளை அதன் நிறுவனர் எச்.சி.எல். கார்ப்பரேஷன் ரூ.17 கோடிக்கு வாங்கியது. இதனையடுத்து, நிறுவனரின் பங்கு மூலதனம் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்கு வியாபாரம்
சர்வதேச நிலவரங்களாலும், உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளாலும் தொடர்ந்து ஆறு தினங்களாக பங்கு வியாபாரம் சரிவை சந்தித்தது. ஐரோப்பாவின் சைப்ரஸ் நாடு கடன் நெருக்கடியில் சிக்கியதையடுத்து ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ள நிலையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை குறைக்கவில்லை. இது, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.
இலங்கை தமிழர் பிரச்சினை
இலங்கை தமிழர் பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது. இது, முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. நாட்டின் நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக உள்ள நிலையில், தி.மு.க. விலகியதால் மத்திய அரசு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால், கடந்த ஆறு தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 834.84 புள்ளிகள் குறைந்து கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு 18,735.60 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 257.60 புள்ளிகளை இழந்தது.
இதுபோன்ற காரணங்களால், பல நிறுவனங்களின் பங்கு விலை அவை ஈட்டும் லாபத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே, இந்த கம்பெனிகளின் நிறுவனர்கள் பங்குகளை பொதுமக்களிடமிருந்து வாங்கி பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளனர். நிறுவனர்களின் பங்கு மூலதனம் உயர்வதால், வெளியில் உள்ள நிறுவனங்கள் அந்த கம்பெனிகளை எளிதில் கையகப்படுத்த முடியாது.
நிதிச் சேவையில் ஈடுபட்டு வரும் மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் 1.81 லட்சம் பங்குகளை ரூ.1.50 கோடிக்கு அதன் நிறுவனர்கள் கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் வாங்கினர். மேலும், வீடியோகான் நிறுவனத்தின் 1.90 லட்சம் பங்குகளை ரூ.3.50 கோடிக்கு அதன் நிறுவனர் வாங்கினார்.
ஜே.கே. பேப்பர்
கடந்த 21–ந் தேதி அன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 91 புள்ளிகளை இழந்தது. அன்றைய தினம் ஜே.கே. பேப்பர் நிறுவனத்தின் 3.20 லட்சம் பங்குகள் ரூ.1 கோடிக்கு அதன் நிறுவனர் வாங்கினார்.
மேலும், அதானி பவர் நிறுவனத்தின் 46 லட்சம் பங்குகளை ரூ.21.73 கோடிக்கும், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர் நிறுவனத்தின் 4.85 லட்சம் பங்குகள் ரூ.16.89 கோடிக்கும் அவற்றின் நிறுவனர்களால் வாங்கப்பட்டது.
எதிர்கால வளர்ச்சி
ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை அதன் நிறுவனரால்தான் நன்கு அறிய முடியும். எனவே, நிறுவனர்களின் பங்கு மூலதனம் உயர்ந்துள்ள கம்பெனி லாப வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்திலும் நிறுவனர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஞாயிற்றுக்கிழமை வருவதால் செழிப்பை தரும் விசேஷ பொங்கல்

» குறைந்து வரும் பறவையினம்!
» விஷமாகும் உணவு... வீரியம் குறைந்து வரும் ஆண்கள்
» கட்டிப்பிடிப்பதனால் ரத்த அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum