தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுரை மாப்பிள்ளை

Go down

மதுரை மாப்பிள்ளை Empty மதுரை மாப்பிள்ளை

Post  meenu Fri Jan 18, 2013 12:46 pm

சிவபெருமாள் நேரடியாக வந்து மீனாட்சியை மணந்ததால் மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது நடைபெறும் திருக்கல்யாணம் அந்த விழாவின் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.

அன்று வடக்கு ஆடிவீதியில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு திருக்கல்யாணம் நடத்தப்படும். கோவில் பட்டர் ஒருவர் மீனாட்சி அம்மனின் பிரதிநிதியாகவும். இன்னொரு பட்டர் சுந்தரரேசுவரரின் பிரதிநிதியாகவும் இருந்து திருணத்தை நடத்துவார்கள்.

திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சிஅம்மன் கோவிலில் தடபுடல் விருந்து நிகழ்ச்சியும் நடக்கும். ஏராளமானோர் இந்த விருந்தை சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச்செல்வார்கள். இந்த தெய்வ திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

* பொதுவாக சுபகாரியங்கள் செய்ய நவமி திதியைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். ஆனால் ராமபிரான் சித்திரை மாதம் சுக்லபட்சம் நவமி திதியில் வரும் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்ததால் அந்நாளை ஸ்ரீராமநவமி என்று பாரதமெங்கும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஸ்ரீராமருடைய ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்ததாம். அதனால் அவர் ஜாதகத்தை எழுதி பூஜிப்போருக்கு அவர்களது ஜாதகரீதியாக ஏற்பட்டிருக்கும் நவக்கிரக தோஷ நிவர்த்தியும் சகல சவுபாக்கியங்களும் கிடைப்பது நிச்சயம் என்பது ஐதீகம்.

* சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் சுக்லபட்ச பஞ்சமி நிதியில்தான் சிவபெருமானின் அவதாரமாகிய தட்சிணாமூர்த்தி சொரூபமான ஆதிசங்கர பகவத் பாதாள் அவதரித்தார். கேரள மாநிலம், காலடியில் பிறந்த அவர் தன் காலடியால் உலகை வலம் வந்து ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தினார். இந்த சங்கர ஜயந்தியைக் கொண்டாடினால் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, சிவராத்திரி முதலிய எல்லாவற்றையும் கடைப்பிடித்த பலனும் கைகூடும் என்று காஞ்சி பரமாச்சாரியார் கூறியருளியுள்ளார்.

* பகவத்கீதைக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும் பாஷ்யம் எழுதி ஸ்ரீரங்கத்திலும், திருமலை திருப்பதியிலும் எம்பெருமானின் பூஜாவித சம்பிரதாயங்களை அமைத்துக் கொடுத்த ஸ்ரீராமானுஜரின் ஜெயந்தியும் சாத்துமுறை வைபவமும் இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. இதேபோல் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் உடுப்பி திருத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்து பகவானுக்கு பூஜை, மற்ற உபசாரங்களும் செய்ய, எட்டு மடங்களை நிறுவிய ஸ்ரீமத்வாச்சாரியாரின் ஜெயந்தியும் இம்மாதத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

* மற்றெல்லா பவுர்ணமிகளை காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்தது சித்ரா பவுர்ணமி. இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் நடந்த இன்றுதான் இந்திரன் தன் குருவை அலட்சியம் செய்த பாவம் அகலுவதற்காக மதுரையை அடைந்து அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திர விமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தைப் போக்கிக் கொண்டான். ஆண்டுதோறும் தேவேந்திரனே நேரில் வந்து சுந்தரேசுவரருக்கு இந்நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அந்தப் புண்ணிய தினத்தில் அன்னதானம் செய்வது மிகச்சிறந்தது என்றும் கூறுவர்.

* இந்நாளில் தோன்றியவன் சித்திரகுப்தன். மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதி எமதர்மனுக்கு கொடுப்பவன். அவனை கொண்டாடி விழா எடுக்கும் நாள் இது என்றும் கூறுவர்.

* சித்ரா பவுர்ணமியன்று விழுப்புரம் அருகில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்காக (திருநங்கை) விழா நடைபெறும். அன்று இந்தியாவில் உள்ள திருநங்கைகள் அங்கு ஒன்று கூடுவர்.

* திருமலைநாயக்க மன்னரால் முதல் முதலில் துவக்கப்பட்ட சித்திரைத் திருவிழா கோலாகலமாக மதுரையில் இன்றும் நடைபெற்று வருகிறது. மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் அடுத்து தேரோட்டம். அதைப்பார்க்கத் தங்க குதிரை வாகனத்தில் பளபளப்புடன் வரும் கள்ளழகர். அவரை எதிர்கொண்டு அழைக்கிற எதிர்சேவை சந்தோஷங்கள். மறுநாள், மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது `கோவிந்தா' முழக்கங்களுடன் எங்கும் பக்தி பரவசம், பிறகு தசாவதார அலங்கார தரிசனம், பூப்பல்லக்கு என்று முடிந்து அழகர் திரும்பி அழகர் கோவிலுக்கு போகும்போது மதுரையிலிருந்து ஒரு கூட்டமே போய் வழியனுப்பி விட்டு வர, இந்த குதூகலத்தை காண்பதற்காகவே சித்திரை திருவிழாக் காலத்தில் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள்.

* சித்திரை சுக்ல திரிதியை முதல் வைகாசி சுக்ல திரிதியை வரையில் `வசந்த கவுரி நோன்பு' என்ற விரதம் கர்நாடக மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum