தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு

Go down

மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு Empty மீண்டும் நயன்தாராவுடன் காதலா?மறுக்கிறார் சிம்பு

Post  ishwarya Mon Mar 25, 2013 2:02 pm



வல்லவன் திரைப்படத்தில் இணைந்து நடித்த சிம்பு-நயன்தாரா ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் தங்களை ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். பின்னர் ஏதோ காரணத்துக்காக அவர்கள் இருவரும் பிரிந்து சென்றனர். சிம்பு பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்ட நயன்தாராவுக்கு வில்லு படத்தின் போது பிரபு தேவா ஆறுதலாக இருந்திருக்கிறார். அதுவே நயன்தாரா-பிரபுதேவாவுக்கும் இடையே காதலாக மாறியது. இந்நிலையில் நயன்தாராவுடன் திருமணத்துக்கு தயாரான பிரபுதேவா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இருப்பினும் நயன்தாரா-பிரபுதேவா காதல் திருமணம் வரை செல்லவில்லை. அந்தக் காதலும் முறிந்து போனது. இதனைத்தொடர்ந்து திரையுலகை விட்டு விலகி இருந்து நயன்தாரா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதனிடையே நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு-நயன்தாரா ஒருவரையொருவர் மனம்விட்டு பேசியுள்ளனர். முடிவில் அவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். நயன்தாராவுடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு குறித்து சிம்பு கூறுகையில் நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் மீண்டும் காதல் துளிர்த்திருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமானது.

நாங்கள் ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறோம். மேலும் சினிமா சம்பந்தமான விழாக்களில் பார்த்து பேசுவதோடு அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். இந்த சந்திப்பின் போது சிம்பு-நயன்தாரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுல குறிப்பிட்டு சொல்லனும்னா இதற்கு முன்பு சிம்பு-நயன்தாராவுடைய காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானதே. அப்படியிருக்கையில் காதல் பிரிவிற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியானதை பார்க்கையில் இது யாரையோ வெறுப்பேற்ற இருக்கலாம்னு தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum