தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் சினிமா உயர்ந்து வருகிறது'-ரஜினி

Go down

"ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் சினிமா உயர்ந்து வருகிறது'-ரஜினி Empty "ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் சினிமா உயர்ந்து வருகிறது'-ரஜினி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:52 pm



தமிழ் சினிமாவின் தரம் ஹாலிவுட் சினிமாவிற்கு இணையாக உயர்ந்து வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏ.வி.எம். தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த "சிவாஜி' திரைப்படம் 3-டி தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வர உள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடந்தது. இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

3-டி தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படத்தை எடுப்பதுகூட சுலபம். ஆனால் வெளிவந்த திரைப்படத்தை 3-டி தொழில்நுட்பத்திற்கு மாற்றம் செய்வது கடினமான காரியம்.

அந்த வகையில் என்னுடைய சிவாஜி திரைப்படத்தை 3-டியில் மாற்றம் செய்து ஏ.வி.எம்.நிறுவனமும், பிரசாத் லேப் நிறுவனமும் சிறப்பான பணியை;க் செய்திருக்கிறார்கள்.

சிவாஜி திரைப்படத்தை 3-டி தொழில்நுட்பத்தில் மாற்றியது முதலில் எனக்குத் தெரியாது. நான் ஒரு சாதாரண ரசிகனாக இப்படத்தை ரசித்துப் பார்த்தேன். இனி வருங்காலங்களில் இவ்வகையான தொழில்நுட்பத்திலான படங்களே மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறும்.

கோச்சடையான் திரைப்படமும் இதே தொழில்நுட்பத்தில்தான் உருவாகி வருகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமா ஹாலிவுட்டுக்கு இணையாக உயர்ந்து வருவது தெரிகிறது என்றார் அவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum