தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தாய் பாசத்தை கூறும் அம்மாவின் கைபேசி

Go down

தாய் பாசத்தை கூறும் அம்மாவின் கைபேசி Empty தாய் பாசத்தை கூறும் அம்மாவின் கைபேசி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:44 pm



தங்கர்பச்சான் இயக்கும் அம்மாவின் கைபேசி படத்துக்கான படப்பிடிப்பு ஓரளவுக்கு முடிவடைந்துவிட்டன. தற்போது படத்தை திரையிடத் தேவையான அடுத்தக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

சாந்தனு - இனியா ஜோடியாக நடித்துள்ள இப்படத்துக்கான 95 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. விரைவில் படத்தை முடித்துவிவோம் என்றும், படத்தின் சிறப்பு என்று கூற வேண்டும் என்றால், பாடல்களும், பாடல் வரிகளும்தான் என்கிறார் இயக்குநர்.

அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கிய தங்கர்பச்சான், இப்படத்தின் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னியைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார். படம் வெளியானதும், நிச்சயம் இந்த இசையமைப்பாளர் பற்றி திரையுலகமே பேசும் என்கிறார்.

தாயுக்கும், மகனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பினை அழகான காட்சிகளைக் கொண்டு கூறும் அம்மாவின் கைபேசி நிச்சயம் அனைவரையும் கவரும் என்கிறார் பச்சான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum