பெசன் உண்டா
Page 1 of 1
பெசன் உண்டா
எர்ணாகுளம், ஆழப்புழா, கொச்சின், கோட்டயம் உள்ளிட்ட கேரளப் பகுதிகளில் கொங்கணியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கிறார்கள். இவர்களது, பண்பாடு, கலை, கலாசாரம், உணவு எல்லாமே கேரளாவில் இருந்து சற்று வேறுபட்டது. இவர்களது பூர்வீகம் கோவா என்கிறார்கள். சரஸ்வதி ஆற்றின் கரையில் வசித்தவர்களே கொங்கணிகள் என்ற கருத்தும் உண்டு.
இந்தியாவின் வடமேற்கில் ஓடிய சரஸ்வதி ஆறு, நிலநடுக்கம் காரணமாக நிலத்துள் அமிழ்ந்து விட்டது. அதனால் அப்பகுதியில் வசித்தவர்கள் இந்தியாவெங்கும் இடம்பெயர்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள். கேரளாவில் வசிக்கும் கொங்கணியர்களின் உணவு வித்தியாசமானது. இவர்களில் கவுட சாரஸ்வத் பிராமணர் என்ற பிரிவினரே கேரளாவில் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களது சைவ உணவு வகைகள் புகழ்பெற்றவை. தேங்காய் பயன்பாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பெசன் உண்டா நீங்களும் செய்யலாம்!
எப்படிச் செய்வது?
கடலை மாவு - கால் கிலோ,
டால்டா - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு,
முந்திரிப்பருப்பு - 50 கிராம்,
நெய் - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
சர்க்கரையை மிக்சியில் தூளாக அடித்துக் கொள்ளுங்கள். முந்திரியை நெய் விட்டு வறுத்துக் கொள்ளுங்கள். கடலை மாவில் பாதியளவு டால்டா சேர்த்து நன்கு பிசைந்து 2 மணி நேரம் வைத்துவிடுங்கள். பின்னர் இந்த மாவை மிதமான தீயில் வைத்து, இடையிடையே மீதமுள்ள டால்டாவை விட்டு அடிப் பிடித்து விடாமல் நன்கு கிளறுங்கள். பொன்னிறப் பதம் வந்ததும் இறக்கி, சற்று சூடு ஆறியதும் சர்க்கரை, ஏலத்தூள், முந்திரி கலந்து நன்கு பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக பிடியுங்கள். பெசன் உண்டா ரெடி!
எளிமையான செய்முறையில், நீண்டநாள் வைத்துச் சாப்பிடும் வகையில் பதார்த்தங்களை செய்கிறார்கள். பாரம்பரிய தானியங்களைக் காட்டிலும் அதன் மதிப்பூட்டிய மாவு வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெசன் உண்டா, கொங்கணியர்களின் திருமண வைபவத்தில் செய்யப்படும் பதார்த்தம். தமிழகத்தில் திருமணம், காதுகுத்து நிகழ்வுகளில் தாய்மாமன் சீர் செய்யும்போது, காப்பரிசி என்ற ஒருவகை இனிப்பு தவறாமல் இடம்பெறும். பச்சரிசியை களைந்து, வெயிலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக உடைப்பார்கள்.
தேங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் வதக்கி, அதோடு எள், வறுகடலையையும் அரிசியில் சேர்த்துக் கொள்வார்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சி அரிசியில் ஊற்றி, கிளறி, விதவிதமான பாத்திரங்களில் ஊற்றி அச்செடுத்து அலங்கரித்து, சீரோடு சேர்த்து தூக்கி வருவார்கள். நிகழ்வு முடிந்தபிறகு, உறவுகளுக்கு அதைப் பகிர்ந்தளிப்பார்கள். அதைப்போலவே கொங்கணி பகுதியில் பெசன் உண்டா. திருமண விழாக்களில் சீரோடு சேர்த்து அனுப்புவார்கள்.
பெசன் உண்டாவுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இது கிருஷ்ணனுக்கு பிடித்த பதார்த்தம். கோகுலாஷ்டமி அன்று, சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கலோடு சேர்த்து பெசன் உண்டாவையும் செய்து படைக்கிறார்கள். சில கிருஷ்ணர் கோயில்களில் இதை பிரசாதமாகவே தருகிறார்கள்.
கேரள இனிப்பகங்களில் கோகுலாஷ்டமி நேரத்தில் இது விற்பனைக்கு வருகிறது. மிகவும் சுவையான இந்த பதார்த்ததை நீண்ட நாட்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெசன் உண்டா
» பெசன் உண்டா பெசன் உண்டா
» பெசன் உண்டா நீங்களும் செய்யலாம்!
» கடவுள் உண்டா இல்லையா?
» கடவுள் உண்டா ? இல்லையா?
» பெசன் உண்டா பெசன் உண்டா
» பெசன் உண்டா நீங்களும் செய்யலாம்!
» கடவுள் உண்டா இல்லையா?
» கடவுள் உண்டா ? இல்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum