தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மம்முட்டி உதவி

Go down

வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மம்முட்டி உதவி Empty வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மம்முட்டி உதவி

Post  ishwarya Mon Mar 25, 2013 1:30 pm

விருதுநகர் அருகே முதலிப்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஆயுர்வேத மருந்துகளை நடிகர் மம்முட்டி வழங்கியுள்ளார்.

அந்த மருந்துகள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

செப்.5-ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 30 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், 14 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவலறிந்த நடிகர் மம்முட்டி, தனது பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மூலம், அக்னிஜித்து என்ற களிம்பு மருந்துகளை அனுப்பியிருக்கிறார்.

அந்த மருந்து பாட்டில்கள் அடங்கிய பார்சல், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. இந்த களிம்பு மூலம் சிகிச்சை அளித்தால் தீக்காயம் விரைவில் குணமடையும் எனக் கூறப்படுகிறது.

அண்மையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க மம்முட்டியை அணுகிய போது ரூ.1 கோடி கேட்டதாக இங்குள்ள தயாரிப்பாளர் திரும்பி வந்தது நினைவிருக்கலாம். ஆனால் அதே தமிழ் திரையுலகில், 6 படங்கள் மட்டுமே நடித்துள்ள ஒரு ஹீரோ ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதும் இங்குதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி!
» பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற
» ‘வெடி’ இசை வெளியீடு
» கமல்ஹாஸனைத் தோற்கடிக்க ஆசை! – மம்முட்டி
» மம்முட்டி ஜோடி ஸ்ரேயா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum