தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற

Go down

பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற Empty பிரபு தேவா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள வெடி திரைப்படம், சில காரணங்களால் குறித்த தேதியில் வெளியாகவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு இந்தப் படம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது குற

Post  ishwarya Sat Apr 13, 2013 6:18 pm


அஜீத் நடிக்கப் போகும் அடுத்த படம் யாருக்கு? இந்த கேள்விதான் கோடம்பாக்கத்தை குடைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாதளவுக்கு மங்காத்தா படத்தின் வசூல் அமைந்துவிட்டதால், அஜீத்தை கொத்திக் கொண்டு போக ஆளாளுக்கு வெறி.

இடையில் யார் யாரையோ மனதில் யோசித்து வைத்திருந்த அஜீத், அடுத்ததாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்திலும் அதற்கு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாகவும் இருந்தாராம். இந்த நேரத்தில்தான் குறுக்கே வந்தது சோனாவின் பிரச்சனை.

சோனாவிடமிருந்து 75 லட்ச ரூபாய் முன் பணம் வாங்கியிருக்கிறார் வெங்கட்பிரபு. மங்காத்தா படத்திற்கு பிறகு சோனாவின் படத்தைதான் இயக்க வேண்டும் இவர். அஜீத்-வெங்கட்பிரபு காம்பினேஷனில் படம் தயாரித்தால் அதன் மார்க்கெட் வேல்யூ என்னவென்று தெரியாதவரல்ல சோனா. கையில் பணமே இல்லை என்றாலும், இருவரது கால்ஷீட் ஒப்பந்தத்தை காட்டினால் கோடிகளை கொட்டுறோம் என்று சொல்வதற்கு ஏராளமான பைனான்சியர்கள் இருப்பதும் அவருக்கு தெரியும்.

இந்த நேரத்தில் வெங்கட்பிரவுக்கு கால்ஷீட் கொடுத்தால் அது சோனா தயாரிக்கும் படமாக அமையும் என்பது அஜீத்திற்கு தெரியாதா என்ன? அதனால்தான் உடனடியாக ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷீட் கொடுத்தாராம். இந்த படத்தை இயக்கப் போவது வெங்கட்பிரபு அல்ல என்பதுதான் இப்போதைக்கு தெரியவருகிற உண்மை.

அதுமட்டுமல்ல, வெங்கட்பிரபுவை தனக்கு படம் இயக்கித்தர சொல்லி வருகிறார் சரண். இந்த இழுபறியை அடுத்துதான் சோனாவின் பாலியல் புகார் அமைந்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இப்போதில்லாவிட்டாலும், எல்லா பொய்களையும் நெட்டி தள்ளிவிட்டு முன்னால் வந்து முகத்தை காட்டும் நிஜம். அதுவரைக்கும் தன்னை தற்காத்துக் கொள்வது சரணின் சாமர்த்தியம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum