தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேண்டும் வரம் தரும் வைகுண்டவாசன் கோவில்

Go down

வேண்டும் வரம் தரும் வைகுண்டவாசன் கோவில் Empty வேண்டும் வரம் தரும் வைகுண்டவாசன் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 12:33 pm

மிக பழமையான காலத்தில் இந்த இடம் மிக அடர்ந்த காடாக (பார்க்கும் இடம் எல்லாம் அடர்ந்த காடு) இருந்ததால் வீஷாரண்யா சேஷாத்திரம் என்று பெயர்.

சாயா விமானம்:

ஸ்ரீவைகுண்டத்தில் விமானம் உள்ளதை போன்று அதே அமைப்பாக இங்கு விமானம் உள்ளதால் சாயா விமானம் என்று பெயர்.

லவ குசா தீர்த்தம்:

ஸ்ரீராம பிரான் புதல்வர்கள் லவன், குசன் இங்கு உள்ள குளத்தில் நீராடி பித்ரு சாபம் தீர்த்ததால், (ராமபிரான்) லட்சுமணன் எதிராக அம்பு எடுத்ததால் லவ-குச தீர்த்தம் என்று பெயர்.

தாயார் மகாலட்சுமி பெயர்: கனகவல்லி தாயார்.

பெருமாள் பெயர்: ஸ்ரீவைகுண்ட வாசப்பெருமாள்.

மிக பழமையான காலத்தில் வால்மீகி ஆஸ்ரமம் இங்கு இருந்ததாகவும், வால்மீகி லவ-குசர்களுக்காக மகா விஷ்ணு இங்கு வைகுண்டவாசனாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

நின்ற கோலத்தில் பெருமாள்:

ஸ்ரீவைகுண்டவாசன் என்றால் அவருக்கு வாசுதேவன் என்ற பெயர் உண்டு. அவர் வீற்றிருந்த கோலத்தில் (அமர்ந்த நிலையில்தான்) இருப்பார். ஆனால், இங்கு வைகுண்டவாசன் வால்மீகி நினைத்த மாத்திரத்தில் அவருக்காகவும் லவ-குசர்கள் பக்திக்காகவும் அந்த நிமிடமே இங்கு வந்ததால் வைகுணடவாசன் நின்ற கோலத்தில் உள்ளார்.

நினைத்த காரியம் நடக்கும்:

வால்மீகி பிரார்த்தனைக்காக எப்படி அந்த நிமிடமே பெருமாள் வந்தாரோ அதேபோன்று பக்தர்களுக்காகவும் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றுகிறார். ஆகையால் நம் பிரார்த்தனைகளை பெருமாளுக்கு சொல்வோம்.

பக்தர்கள் வாசலே சொர்க்கவாசல்:

நித்திய வைகுண்ட வாசனாக இருப்பதால் வைகுண்ட ஏகாதசி அன்று இங்கு பெருமாளுக்கு தனி சொர்க்கவாசல் கிடையாது. அன்று காலை கருட வாகனத்தில் இங்கு பெருமாளை சேவிக்கலாம். இந்த சன்னதியில் உற்சவர் ஆஹ்வான அஸ்தம் (ஆஹ்வானம் என்றால் அழைப்பது) இடது கையினால் அழைத்து வலது கையால் ஆசீர்வதிக்கிறார் என்று பெயர். ஸ்ரீவைகுண்டத்தை தவிர வேறு எதுவும் இந்த உலகத்தில் இல்லை என்று பொருள்பட அழைக்கிறார்.

ஸ்ரீராமர் இங்கு மரவுரியில்:

இந்த கோவிலின் சிறப்பாக ராமபிரான், சீதை காட்சியளிக்கின்றனர். ராமன் என்றாலே அவருக்கு கரவர்த்தி திருமகன் என்று பெயர் உண்டு. கரவர்த்தி திருமகன் என்றால் அவர் அனைத்து நாட்டுக்கும் ராஜா என்று பொருள். இங்கு ராமன் மிக எளிமையாக தவ கோலத்தில் தலையில் மரவுரி தரித்துக் கொண்டு சேவை சாதிக்கிறார்.

கிரீடம் இல்லாமல் கோடாலி முடிச்சுடன் சீதாதேவி:

பொதுவாக எங்கும் சீதை ராணியாக கிரீடத்துடன் காட்சி தருவாள். இங்கு ஆஸ்ரமத்தில் இருந்த பொழுது ஆஸ்ரம வாசியாக கோடாலி முடிச்சுடன் கிரீடம் இல்லாமல் காட்சி தருகிறாள். ராமன் சீதை இருந்தாலே உடன் அனைத்து கோவில்களிலும் லட்சுமணன், அனுமன் இருப்பர்.

இஙகு மட்டும் நீண்ட பிரிவுக்கு பின் ராமன் சீதை சேர்ந்ததால் ஏகாந்த தரிசனமாக ராமன்/சீதை மட்டும் சேவிக்கலாம். மூலஸ்தானத்தில் வலதுபுறம் வால்மீகி, லவ குசர்களை ஒரே இடத்திலும் பக்கத்தில் ராணி சீதையும் சேவிக்கலாம்.

மூன்று பெருமாள் ஆஹ்வான பெருமாளாக உள்ளார்:

1) திருவல்லிக்கேணி நரசிம்ம பெருமாள் (பார்த்தசாரதி கோவிலில்)

2. பக்தவத்சலப் பெருமாள்- ஆக்குவான அஸ்தம்.

3) வைகுண்டவாசப் பெருமாள்- கோயம்பேடு.

இந்த இடத்தின் மற்ற பெயர்கள்:

1) வீஷாரண்யா சேஷத்திரம்:

பார்த்த இடம் அனைத்தும் காடு என்பதால்.

2) குச லவ புரம்:

ராமர் குழந்தைகள் இங்கு அவதரித்ததால் இந்த பெயர்.

3) ராகவபுரம்:

சீதையுடன் ராமர் ஒரு நீண்ட பிரிவுக்கு பின் இங்கு மீண்டும் சேர்ந்ததால் இப்பெயர் ராமனின் மற்றொருபெயர்.

4) கோயம்பேடு:

பசுக்களை பாதுகாக்கும் கோ சம்ரக்ஷணம் என்ற தர்மத்தை மிக சிறந்த முறையில் லவ குசர்கள் செய்ததால் இப்பெயர்.

5) ப்ராசேதசபுரம்:

லவ குசர்கள் தன் தந்தை மற்றும் லட்சுமணன் போன்றவர் எதிராக ஆயுதம் ஏந்தியதால் அதற்கு பரிகாரமாக (ப்ராயசித்தம்) இங்கு பெருமாளையும், சிவனையும் வழிபட்டதால் இந்த பெயர்.

6) கோசை நகர்:

அருணகிரி நாதன் சிவாலயத்தில் உள்ள முருகனை பாடும் போது கோசை நகர் என்று குறிப்பிட்டு உள்ளார். இத்திருக்கோவில் அருகில் உள்ள குறுங்காலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் கோவிலில் உள்ளது.

7) கோயட்டிபுரம்:

கோயட்டி என்ற குருட்டு நாரை இங்கு சிவ நாமத்தை சொல்லி சிவலோக பதவி அடைந்ததால் இப்பெயர்.

மற்ற சிறப்புகள்:

1) உற்சவமூர்த்தி தன் இடது கையில் பக்தர்களை அழைப்பதால் நம் பிரார்த்தனைகள் மிக எளிதில் நிறைவேறும்.

2) மூலவர் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பதால் நம் மன கவலைகள் எல்லாம் நீங்கும்.

3) ராமரும் சீதையும் நீண்ட பிரிவுக்கு பின் இங்கு சந்தித்ததால் அவரை நாம் தரிசிக்கும் பொழுது தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும்.

4) கர்ப்பவதியாக சீதை இங்கு வந்து லவ குசர் பிறந்ததால், சீதையிடம் பிராëர்த்தனை செய்தால் சந்தான பாக்கியம் உண்டு.

5) எதிரில் உள்ள குளத்தில் நீராடி பெருமாளை தரிசித்தால் பித்ரு சாபம் நீங்கும்.

6) கண் கவரும் கனகவல்லி தாயாரை தரிசித்தால் வியாபாரம் பல மடங்கு பெருகும்.

7) அருள்தரும் ஆண்டாளை தரிசித்தால் நாராயணன் பக்தி கிட்டும்.

வழிபாட்டு நேரம்:

இந்த கோவிலின் வழிபாட்டு நேரம் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சாமி தரிசனம் செய்யலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum