காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
Page 1 of 1
காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறை போக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ஜோதி ( நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது.
அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர்(கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமாயின.
இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப் பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன் நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப்போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும்.வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்ட நாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் காத்ர சுந்தரேஸ்வரர் கோவில்.கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் காத்ர சுந்தரேஸ்வரர் கோவில்.
கோவில் செல்லும் வழி:
சென்னையில் இருந்து பேருந்து மூலம் மயிலாடுதுறை சென்று பின் அங்கிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8.கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
» மதுரை சுந்தரேஸ்வரர் கோவில்
» மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
» பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum