ஸ்ரீசெண்பகாம்பிகை கோவில்
Page 1 of 1
ஸ்ரீசெண்பகாம்பிகை கோவில்
திருவல்லிக்கேணியில் தபால் நிலையம் அருகில் திருவேட்டீஸ்வரன்பேட்டை என வழங்கும் பகுதியில் அருள்மிகு செண்பகாம்பிகை சமேத திருவேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் சுமார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ஈசனுக்கு "பார்த்த பிரகரலிங்கம்'' என்ற பெயரும் உண்டு. மாதவனை மணக்க மாதவம் இருந்த மகாலட்சுமி இந்த இடத்தில் உள்ள செண்பகவனத்தைத் தேர்ந்தெடுத்து தவம் இருந்தாள்.
அதனால் செண்பகவல்லித் தாயார் என்ற பெயருடன் பெருமானை மணம் புரிந்தாள். இங்குள்ள செண்பக ஓடை, தலத்தீர்த்தமாகும். இந்த ஆலய ஈஸ்வரரை லட்சுமி வழிபட்டதால் திருவேட்டீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.
தோஷம் நீக்கும்::
இந்தத்திருத்தலம் காசிக்கும் காளஹஸ்திக்கும் ஈடானது என்று கூறுகின்றனர். காலசர்ப்பதோஷம் மற்றும் ராகு தோஷம் போன்றவற்றால் அல்லல்படுபவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்தால் கைமேல் பலன் அடையலாம்.
இத்தலம் ராகு, கேதுவிற்கு உகந்தது என்பதற்கு ஆதாரமாக ஈஸ்வரனின் சன்னதி, அம்பாள் சன்னதி மண்டபத்தின் மேற்கூரையில் பார்த்தால் ராகு, கேதுவின் சிற்பங்களைக் காணலாம்.
மிகப்பழமையும், அருமையானதுமான இந்த ஆலயத்தினை ஒருமுறை சுற்றி வந்தால் அனைத்துக் கடவுளர்களையும் கண்டு தரிசிக்கலாம். காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் இங்கு ராகு, கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்.
போக்குவரத்து வசதி::
இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்

» நரசிங்கப்பெருமாள் கோவில்
» கோவில் .........
» விருத்தபுரீஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum