அதீத மாதவிடாய் நோய்
Page 1 of 1
அதீத மாதவிடாய் நோய்
உபயோகிக்கும் முறை:
நாகப்பட்டையை சிறிது தண்ணீர் விட்டு இடித்துப் பிழிந்த சாறில் 30 மி.லி காலை, மாலை என குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் அதிக ரத்தப் போக்குக் குறையும்.
மருந்து 2
உபயோகிக்கும் முறை:
வாழைப் பூவை இடித்துப் பிழிந்த சாறு 30 மி.லி குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்குக் குறையும்.
மருந்து 3
உபயோகிக்கும் முறை:
கருவேலம் பட்டையை இடித்து 60 கிராம் அளவு எடுத்து 600 மி.லி தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து, 100 மி.லியாகச் சுண்ட வைத்து மருந்துகளைப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மி.லி வீதம், ஒருநாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
மருந்து 4
உபயோகிக்கும் முறை:
மாதுளை வேர்ப் பட்டையைக் கஷாயம் செய்து அதில் மாதுளம் பட்டையின் சூரணத்தைக் கலந்து குடித்து வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
மருந்து 5
தேவையான பொருட்கள்:
மாங்காய்.
நெய்.
உபயோகிக்கும் முறை:
மாங்காயின் தோலைச் சீவி நெய்யில் வறுத்து அம்மியில் அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
மருந்து 6
தேவையான பொருட்கள்:
மாம்பருப்பு.
தேன்.
உபயோகிக்கும் முறை:
மாம்பருப்பை வெயிலில் காய வைத்து, இடித்து, பொடித்து, சலித்து 1/4 – 1/2 டீஸ்பூன் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குறையும்.
மருந்து 7
உபயோகிக்கும் முறை:
அசோகப் பட்டையைப் பஞ்சு போல் இடித்து 50 கிராம் எடுத்துக்கொண்டு 60 மி.லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் ஏற்றிச் சிறு தீயாக எரித்து 150 மி.லியாகச் சுண்ட வைத்து வேளைக்கு 50 மி.லி ஆகக் குடித்து வந்தால் பெரும்பாடு குறையும்.
மருந்து 8
உபயோகிக்கும் முறை:
சீரகத்தை இடித்து, பொடித்து, சலித்து சம அளவு சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு 1/2 -1 டீஸ்பூன் அரிசி களைந்த நீருடன் ஒருநாளைக்கு இரண்டு வேளை குடித்து வந்தால் அதிக ரத்தப்போக்குக் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அதீத மாதவிடாய் நோய்
» அதீத மாதவிடாய் நோய்
» மாதவிடாய் நோய் குறைய
» மாதவிடாய் நோய் குறைய
» பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம்
» அதீத மாதவிடாய் நோய்
» மாதவிடாய் நோய் குறைய
» மாதவிடாய் நோய் குறைய
» பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய் நோய் கட்டுப்படுமாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum