தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆணவம் நீக்கும் அங்கபிரதட்சணம்........

Go down

ஆணவம் நீக்கும் அங்கபிரதட்சணம்........ Empty ஆணவம் நீக்கும் அங்கபிரதட்சணம்........

Post  meenu Sun Mar 24, 2013 2:37 pm



மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை முருகன் கோயில். இங்குள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின் இங்கு கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு வரும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூரில் தீர்த்தமாடுங்கள்.......... உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும் பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும். பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.

அவதார நட்சத்திரம்.......... மகிஷி என்ற அரக்கியை அழிக்க தேவர்கள் விரும்பினார்கள். அவளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரே அழிக்க முடியும் என்பதால், விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார். அந்த மகன் தர்மசாஸ்தா ஆவார். இவர் மகிஷியை அழித்தார். அய்யப்பனின் அவதாரமாகக் கருதப்படுவது இவரே. சாஸ்தா அவதாரம் எடுத்தது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.
சாஸ்தா பெயர் விளக்கம்........... பங்குனி உத்திரம் சாஸ்தா கோவில்களில் தான் பெரும்பாலும் கொண்டாடப்படும். கோவில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிகளில் காணப்படும். எனவே, தனித்து செல்லாமல் கூட்டமாகச் சென்று வழிபடுவார்கள். `சாத்து' என்ற சொல்லுக்கு `கூட்டம்' எனப் பெயர் வந்தது. கூட்டமாக வந்து வழிபடுவதால் இவர் சாஸ்தா எனப்பட்டார்.

தீர்த்தத் தொட்டியில் நீராடலாம்........ தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டியில் உள்ள விருப்பாச்சி ஆறுமுகநயினார் கோயிலில் நாக சுப்பிரமணியர் உள்ளார். ராகு, கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

விசேஷ காலங்களில் சந்தனம், அரிசிமாவு காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயில் முன்புள்ள தீர்த்தம் வற்றாமல் எப்போதும் சுரந்தபடி இருக்கிறது. இதன் பெயரால் இத்தலம் தீர்த்தத் தொட்டி என பெயர் பெற்றிருக்கிறது. பங்குனி உத்திரத்தன்று, இந்த தீர்த்தத்தில் நீராடி, ஆறுமுக நயினாரை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum