அங்கபிரதட்சணம்
Page 1 of 1
அங்கபிரதட்சணம்
ஆன்மாக்களுக்கு எல்லாம் அதி தேவதையாக விளங்கும் தலைமைத் தாய் அங்காளி ஆகும். அந்த அங்காளி மனிதப் பிறவிகள் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களைப் பற்றிக் கொண்டு ஆட்டுதாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவானது பற்றிக் கொண்ட மனிதன் என்ற பூத உடலை விட்டு விலகி மீண்டும் அம்மனுடைய கோயிலிலேயே!
அம்மனுடைய சிற்சக்தி சொரூபத்தை சென்று அடைய வேண்டும் என்பதை கருதியே அங்கபிரதட்சணம் என்ற பிரார்த்தனையே செய்யப்படுகிறது. பூமியானது தன்னைத்தானே சுற்றிவர ஒரு நாளும், தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றிவர ஒரு வருடமும் ஆகிறது.
மனிதன் செய்த பாவ எண்ணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு கோயிலையும் சுற்றி வருவதால் அப்பாவச் செயல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விடுவதாகவும் கோயிலைச் சுற்றி வலம் வரும் போது அந்த பாவங்கள் அனைத்தும் அறவே நீங்கி விடுவதாகவும் கருதப்படுகிறது.
அங்க அவயம் என்பது எட்டு உறுப்புகள் கொண்ட தொகுப்பாகும். அவை, தலை, நெற்றி, கரங்கள், தோள்பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் ஆகும். இவையாவுமே அம்மன் திருக்கோயில் வளாகத்தில் பூமியில் படும்படியாக நமஸ்காரம் செய்வதே அங்க பிரதட்சணம் என்பதாகும்.
பலி பீடத்திற்கு எதிராக உடலை தூய்மையாக்கிக் குளித்து ஈரத்துணியுடன் கிழக்கு நோக்கி தரையில் உருண்ட வண்ணம், மீண்டும் மேற்குப் பக்கமாக வந்து பலி பீடத்தின் முனபாகவே பிரார்த்தனையை முடித்து எழுந்து மீண்டும் குளித்து தூய ஆடை உடுத்தி அம்மன் திருக்கோயில் உள்ளே சென்று அம்மன் புற்றையே வலம் வந்த வண்ணம் மூலவரை தரிசிக்க வேண்டும் பிறகு காணிக்கையை உண்டியலில் செலுத்தி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
அங்காரதட்சனை வழிபாடு செய்வதால் ஜீவ ஆத்மாக்களைப் பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், பில்லி, ஏவல், வைப்பு, காட்டேரி, சூன்யங்கள் யாவும் அம்மன் அருளால் தானாக விலகிச் செல்வதாக கருதப்படுகிறது. அங்கப்பிரதட்சனம் சுற்றி வரும் பக்தர்கள் அம்மன் நினைவைத் தவிர வேறு சிந்தனையை மனதில் வைக்கக்கூடாது. எக்காரணம் கொண்டும் பெண்கள் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum