திருமணத்தடை நீக்கும் காளகஸ்தீஸ்வரர்
Page 1 of 1
திருமணத்தடை நீக்கும் காளகஸ்தீஸ்வரர்
தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏராளமான கோவில்களை கட்டினார். அதன்மூலம் தமிழர்களின் கட்டிடக்கலையை உலகமே வியக்கும்படி செய்தார்.
அந்தவகையில், ராஜராஜ சோழனின் சிறப்புகளை பறை சாற்றிய கோவில்களில் ஒன்று தான் கத்தரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோவில். இத்தலத்தில் இறைவனாக காளகஸ்தீஸ்வரரும், இறைவியாக ஞானாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்தல வரலாறு:
சப்த ரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகியோர் இறைவனின் சாபத்திற்கு ஆளாகினார். தங்களுடைய சாபம் நீங்க வேண்டி பல தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தனர். அவ்வாறு வழிபட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை.
தங்கள் சாபம் நீங்காமல் போய் விடுமோ என அஞ்சினர். அந்த சமயத்தில் தான் சப்தரிஷிநத்தம் என்னும் இந்த கிராமத்திற்கு வந்து, இங்குள்ள ஞான தீர்த்தத்தில் 48 நாட்கள் நீராடி இத்தலத்து இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றார்கள் என்கிறது இந்த கோவில் தல வரலாறு.
இத்தலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்கு இணையான தலமாக போற்றப்படுகிறது. அதனால்தான் இந்த தலம் `தென் காளஹஸ்தி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி சென்று வழிபட முடியாதவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டால் ஸ்ரீகாளஹஸ்தி சென்று இறைவனை வழிபட்ட புண்ணியத்தை பெறலாம் என்பது ஐதீகம். மேலும் இத்தலம் ராகு, கேது பரிகார தலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
திருமண தோஷம் நீங்க...
இங்குள்ள நந்தி சிலை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நந்தி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமண தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி, நவக்கிரகங்களுக்கு பூஜை செய்து, காளகஸ்தீஸ்வரரை வழிபட்டால் திருமணத் தடை எளிதில் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
நீண்ட ஆயுள், வற்றாத செல்வம் பெற இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும், குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வாழ இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு பவுர்ணமி தோறும் சிறப்பு பூஜைகளும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களுக்கு ராகு, கேதுவுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
பழங்காலத்தில் இந்த கிராமத்தை சப்தரிஷிநத்தம் என்று அழைத்தனர். நாளடைவில் இப்பெயர் மருவி `கத்தரிநத்தம்' என்றாயிற்று. இத்தலத்தில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. தல விருட்சம் வில்வமரம்.
இங்குள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம், சப்த தீர்த்தம் என்னும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
அமைவிடம்:
தஞ்சையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புன்னைநல்லூர். அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கத்தரிநத்தம் உள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், அம்மாப்பேட்டை செல்லும் பஸ்கள் இந்த வழியாகவே செல்கின்றன. சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிறு) காலை நடைபெற உள்ளது.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணத்தடை நீக்கும் காளகஸ்தீஸ்வரர்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலம்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலம்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலம்
» திருமணத்தடை நீக்கும் திருத்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum