தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்தடை நீக்கும் திருத்தலம்

Go down

திருமணத்தடை நீக்கும் திருத்தலம் Empty திருமணத்தடை நீக்கும் திருத்தலம்

Post  birundha Sun Mar 24, 2013 5:12 pm

சிவபெருமான் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்ற போது தேவர்களும், முனிவர்களும் அங்கே கூடினர். இதனால் வடதிசை உயர்ந்தது, தென்திசை தாழ்ந்தது. உலக மக்கள் அஞ்சினர். உலகை சமநிலை அடைய செய்வதற்காக சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார்.

அதற்கு அகத்திய முனிவர், `சுவாமி... தங்களது மணக்கோலத்தைக்காணும் பாக்கியம் எனக்கு இல்லையா?' என வினவ... அதற்கு இறைவனும், வேதங்கள் வழிபட்ட வேதவனம் எனும் வேதாரண்யத்தில் தரிசனம் தருவதாக வாக்களித்தார். அவ்வாறே அகத்திய மாமுனிவர் வேதாரண்யம் அருகே `அகஸ்தியம் பள்ளி' என்ற இடத்தில் தங்கி தனது பாதத்தை தரையில் ஊன்றி அழுத்த உலகம் சமநிலை அடைந்தது.

தொடர்ந்து, அகத்திய முனிவர் அங்கே தங்கி தவம் செய்து வந்தார். இறைவனும் வாக்களித்தபடியே அகத்தியருக்கு சித்திரை மாதம் வளர்பிறையில் சப்தமி திதியில் உச்சிக்காலத்தில் வேதாரண்யத்தில் பார்வதி சமேதராய் தனது திருமணக்கோலத்தை காண்பித்து அருளினார். இதன்படி, இக்கோவில் கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு பின்னால் இறைவனும், இறைவியும் திருமணக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர்.

இவர்களது திருமண விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இத்தலத்தில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது. இதையொட்டி, சிவன்- பார்வதி திருமேனிக்கு ஆண்டுக்கொரு முறை சித்திரைமாதம் சுகிலபட்சத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து தைல அபிஷேகம் செய்யப்படும். மறுநாள் சந்தனத்தை கையால் அரைத்து இறைவன், இறைவிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும்.

அகத்தியர் வரவழைக்கப்பட்டு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி திருக்கல்யாண உற்சவமாக நடைபெறும். இறைவன், இறைவிக்கு சாத்தப்படும் சந்தனம் அடுத்த ஆண்டு தான் கலைக்கப்படும். அதுவரை அந்த சந்தனம் இறைவன் திருமேனியிலேயே இருக்கும். தினசரி மாலைகள் மட்டும் அணிவிக்கப்படும். முன்புறம் உள்ள சிவலிங்கத்திற்கு ஆறுகால பூஜை நடைபெறும்.

இந்த சிவலிங்கத்திற்கு அதிக விலை உயர்ந்த ஆடைகளாக இருந்தாலும் புதிய வஸ்திரமாக அணியமாட்டார்கள். அதை நனைத்து காய வைத்து சாத்துவதுதான் இங்குள்ள வழக்கம். இறைவனுக்கு தினசரி உப்பில்லாத சாதம் தான் நைவேத்தியம் செய்யப்படும்.

நீண்ட காலம் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடுவதாக ஐதீகம். அதனாலேயே இக்கோவில் இறைவனுக்கு `மறைக்காட்டுறையும் மணாளர்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum