ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்த் மறைவு
Page 1 of 1
ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்த் மறைவு
லண்டன், டிச. 4: ஹிந்தி திரைஉலகில் அழியாப் புகழ் பெற்ற இளமைமாறா காதல் நாயகனாகத் திகழ்ந்த தேவ் ஆனந்த் (88), லண்டனில் உள்ள வாஷிங்டன் மேஃபேர் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இங்கு சிகிச்சைக்காக வந்திருந்த அவர், உறங்கிக்கொண்டிருந்தபோது (லண்டன் நேரப்படி இரவு 10 மணி) மாரடைப்பு காரணமாக இறந்தார். அப்போது அவரது மகன் சுனில் ஆனந்த் அருகில் இருந்தார்.
மாரடைப்பு ஏற்பட்டதும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தேவ் ஆனந்த் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமை லண்டனில் அவர் எரியூட்டப்படலாம் என அவரது உதவியாளர் மோகன் தெரிவித்தார்.
தேவ் ஆனந்த் மனைவி, மகள் தேவினா, பேத்தி ஆகியோர் லண்டனுக்கு வந்துகொண்டிருக்கின்றனர் என்றார் மோகன்.
ஹாலிவுட் நாயகரான கிரிகோரி பெக்கை அடியொற்றி நடித்த தேவ் ஆனந்த், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். அவரது கைடு, பாஸி, நகைத் திருடன், சிஐடி, ஜானி மேரா நாம், டாக்ஸி டிரைவர், முனீம்ஜி, அமீர் கரீப், வாரண்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ், ஹம் தோனோ ஆகிய திரைப்படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன. ஜீனத் அமன், டினா முனீம், மும்தாஜ், தபு போன்ற நடிகைகளை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர் தேவ் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
2001-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும்; 2002-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் தேவ் ஆனந்துக்கு வழங்கப்பட்டன.
1923-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ஒன்றுபட்ட பஞ்சாபில் குருதாஸ்பூர் என்ற ஊரில் பிறந்த தேவ் ஆனந்த், பாகிஸ்தானில் உள்ள லாகூரில் அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1940-ம் ஆண்டு அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். 1946-ம் ஆண்டு ஹம் ஏக் ஹைன் எனும் படத்தில் முதன்முறையாக தேவ் ஆனந்த் தோன்றினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபல நடிகர் தேவ் ஆனந்த் காலமானார்
» சோனா இயக்கத்தில் தேவ்
» ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்
» லால்குடி ஜெயராமன் மறைவு: ஜெயலலிதா இரங்கல்
» தேவ் கர் பேடா
» சோனா இயக்கத்தில் தேவ்
» ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்
» லால்குடி ஜெயராமன் மறைவு: ஜெயலலிதா இரங்கல்
» தேவ் கர் பேடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum