காதல் திருமணம் செய்ய மாட்டேன்; ஜெய்
Page 1 of 1
காதல் திருமணம் செய்ய மாட்டேன்; ஜெய்
ஜெய்-அஞ்சலி இருவரும் எங்கேயும் எப்போதும் படத்தில் சேர்ந்து நடித்தனர். படத்திலேயே இரண்டுபேரின் ஜோடி மிகவும் பொருத்தமாக இருப்பதாக கூறினர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த காதல் கிசுகிசுவால் அதிர்ச்சியான அஞ்சலி, நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் காதலிப்பதாக கூறும் அந்த நடிகருடன் சேர்ந்து இனி நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஜெய் இதுகுறித்து பேட்டியில், எங்கேயும் எப்போதும் படத்தில் தான் நானும், அஞ்சலியும் சேர்ந்து நடித்தோம். கடைசியாக ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரை பார்த்தேன். அதன்பிறகு அவரை சந்திக்கவே இல்லை.
எங்களுக்குள் காதல் என்று கூறுவது எல்லாம் வெறும் வதந்தி தான். என் கவனம் எல்லாம் இப்போது நடிப்பில் தான் இருக்கிறது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. நான் நிச்சயமாக காதல் திருமணம் செய்ய மாட்டேன். அதிலும் குறிப்பாக ஒரு நடிகையை திருமணம் செய்ய மாட்டேன். என் வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காதல் திருமணம் செய்ய மாட்டேன்! – சினேகா
» காதல் திருமணம் செய்ய மாட்டேன் – கார்த்தி பேச்சு
» “நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
» நடிகை அஞ்சலியுடன் ஜெய் காதல்?
» ஜெய் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’
» காதல் திருமணம் செய்ய மாட்டேன் – கார்த்தி பேச்சு
» “நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
» நடிகை அஞ்சலியுடன் ஜெய் காதல்?
» ஜெய் நடிக்கும் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum