தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விமர்சனம்: எங்கேயும் எப்போதும்

Go down

விமர்சனம்: எங்கேயும் எப்போதும் Empty விமர்சனம்: எங்கேயும் எப்போதும்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:25 pm

காதல், பாசம், அன்பு அனைத்தையும் ஒரு விபத்து மாற்றிப் போடுவதால் மனித மனங்கள் நிலைகுலையும் இடம்தான் "எங்கேயும் எப்போதும்'.

நேர்முகத் தேர்வுக்காகத் திருச்சியிலிருந்து சென்னை வருகிறார் அனன்யா. அவரை அழைத்துப் போகவேண்டிய அக்கா அவசர வேலையாகக் காஞ்சிபுரம் போய்விட, தற்செயலாகப் பேருந்து நிலையத்துக்கு வரும் சர்வாவிடம் வந்து சேருகிறது அனன்யாவைப் பாதுகாக்கும் கடமை. கடமை வழக்கம் போலக் காதலில் முடிகிறது. தன் காதலைப் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கத் திருச்சிக்குப் பயணமாகிறார் அனன்யா.

இன்னொரு புறம் திருச்சியிலிருக்கும் அஞ்சலிக்கும் எதிர் வீட்டிலிருக்கும் ஜெய்கும் காதல். காதலியைத் தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்த விழுப்புரம் மாவட்டம் அரசூருக்குப் பயணமாகிறார் ஜெய். அனன்யாவை திருச்சியில் தேடிக் கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்துடன் அதே பேருந்தில் சென்னைக்குத் திரும்புகிறார் சர்வா.

இந்த இரண்டு பேருந்துகளும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொள்ள இந்த ஜோடிகளின் காதல் என்ன ஆனது என்பதைப் பதற வைக்கும் கிளைமாக்ஸ் காட்சியுடன் சொல்லி முடிக்கிறது படம்.

அஞ்சலி - ஜெய் ஜோடி திரைக்கதைக்கு கனகச்சிதமான பொருத்தம். தன்னைத் தொலைவில் இருந்தே ரசிக்கும் ஜெய்யிடம், எதிர்பார்க்காத தருணத்தில் அவரது அறைக்குள் புகுந்து பேசுவது, ""அங்கே போ, அவரைப் பாரு! இங்கே போ, இவரைப் பாரு!'' என ஜெய்யை அலைக்கழிப்பதும்,""என்னைக் காதலிக்கணும்னா இவ்வளவு பிரச்னைகள் இருக்குது. இதையெல்லாம் சமாளிக்க முடியும்னா என்னை காதலிச்சுக்கோ, அதுக்கு ஒரு மணி நேரம் வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ''ன்னு ஒவ்வொரு வசனத்திலும் பளிச்சென்று மனதைத் தொடுகிறார் அஞ்சலி.

கடைசி வரைக்கும் ""என்னங்க... சொல்லுங்க'' என்று மரியாதை நிமித்தமாகவே அஞ்சலியைப் பார்ப்பது, பேசுவது, பம்முவது என ஜெய்யும் ஈடு கொடுக்கிறார்.

சர்வா - அனன்யா ஜோடியின் காதல் ஒரு கவிதை. சென்னை நகர வீதிகளை ஆச்சரியம் கலந்து பார்க்கும் அனன்யா, சர்வாவையும் சந்தேகப்படும் இடங்களில், ரசிகனுக்கு மெல்லிய புன்னகை. ஐ.சி.யூ. வார்டில் சர்வா தன் காதலைச் சொல்ல, விரல் பிடித்து "உன் பெயரென்ன?' என்று கேட்கும் அனன்யா அற்புதம்.

இதுவரை முகம் பார்க்காத மகளை வெளிநாட்டு வேலையையும் துறந்து பார்க்கச் செல்லும் பாசமுள்ள தந்தை, திருமணம் முடிந்த சில நாள்களில் அதே காதலுடன் பயணிக்கும் தம்பதி, ஊர்ப் பஞ்சாயத்து தலைவர், காதல் ஸ்பரிசங்களுடன் பயணிக்கும் மாணவன் - மாணவி என ஒவ்வொரு பாத்திரமும் வாழ்வின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.

திரைக்கதையில் திடீர் திடீரென்று காணப்படும் சடன் பிரேக் திருப்பங்களும், நிகழ்வுகளும் படத்தின் பலம். ஆனால் தொடர்ந்து தடதடக்க வேண்டிய திரைக்கதை பின்பாதியில் அடங்கி, ஒடுங்கி மாட்டு வண்டி வேகத்தில் நகர்வது பலவீனம். "கொட்டாவி' விட்டு சலித்துக் கொள்ள வைத்துவிட்டு, விறுவிறுப்பாக "க்ளைமேக்சில் கொட்டுவோம் முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். தூங்க விடாமல் பார்த்துக் கொண்டு விட்டார்.

"வழக்கமான காதல் சினிமா' என்று எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம்.

இயக்குநர் சரவணன் நம்பிக்கைக்குரிய வரவு என்றால், மனதைத் தொடுகிறது வேல்ராஜின் கேமிரா. சத்யாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மெலடி ரகம்.

படத்தின் முதல் பாதியிலேயே விபத்தின் அதீதப் பரபரப்பு முடிந்து விடுவதால் பின்பாதியில் ஏற்படும் நீண்ட பயணம் சற்றே அலுப்புத் தட்டுகிறது. குறிப்பிட்ட நாலு பேரை மட்டுமே சுற்றி சுற்றி வரும் திரைக்கதை என்பதால் சமயங்களில் திட்டுத் திட்டாய் தேங்கி நிற்கிறது.

சமீப காலத்திய திரைப்படங்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. ரணகளமாகக் காதலைச் சித்தரிக்க நமது படைப்பாளிகள் ஆசைப்படுவது ஏன்? காதலைத் தோல்வியில் முடிப்பதன் மூலம் ஏதோ யதார்த்தத்தைச் சித்தரிப்பதாக இந்தப் படைப்பாளிகள் நினைக்கிறார்களா இல்லை சந்தோஷமாகக் காதல் ஜோடிகளை இணைக்க மனமில்லாத வக்கிரத்தனமா என்பதுதான் புரியவில்லை. "அங்காடித் தெரு', "மைனா' வரிசையில் இன்னொரு துல்லியல் காதல் கதை. ரணகளமான களங்களில், ரத்தத்தில் எழுதும் காதல்களை விட்டு, மயிலிறகாலும் கொஞ்சம் எழுதிப் பார்க்கலாம்.

தினமணி விமர்சன குழு.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum