எங்கேயும் எப்போதும் !
Page 1 of 1
எங்கேயும் எப்போதும் !
ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா நடித்து இருக்கும் படம் ‘எங்கேயும் எப்போதும்’. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, அவரிடம் உதவி இயக்குனராக இருந்த சரவணன் இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யா இசையமைத்து இருக்கிறார்.
இப்படம் செப் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ( செப் 8 ) நடைபெற்றது.
அவ்விழாவில் அனன்யாவை தவிர மற்ற நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கு முன் படத்தின் 4 பாடல்களை திரையிட்டு காட்டினார்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.
சர்வானந்த், அனன்யா இடம் பெறும் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல்,
ஜெய், அஞ்சலி இடம் பெறும் ‘சொட்ட சொட்ட நனைய வைத்தாய்’ பாடல்,
அஞ்சலியை நினைத்து ஜெய் பாடவது போல அமைந்து இருக்கும் ‘மாசமா ஆறு மாசமா’ பாடல், மற்றும்
தனது காதலனை பிரிந்து பேருந்தில் அனன்யா போகும் போது இடம் பெறும் ‘உன் பேரே தெரியாது’ எனத் தொடங்கும் பாடல் ஆகிய நான்கு பாடல்களும் அழகாக காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் : ” என்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணன் என்னிடம் இந்த கதையை கூறும்போது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதனால் தயாரிக்க முன் வந்தேன்.
இந்த கதையில் விதியையே வில்லனாக படம் முழுவது காட்சிப்படுத்தி இருப்பார். அது என்னை மிகவும் கவர்ந்தது.
நாம் பைக்கிலோ, காரிலோ செல்லும் போது வேகமாக செல்கிறோம். நாம் மெதுவாக சென்றால் ஒரு 20 நிமிடமோ, 30 நிமிடமோ தாமதமாக சென்றால் ஒன்றும் ஆக போவதில்லை. ஆனால், நமக்கு எதை எடுத்தாலும் அவசரம். ஒரு விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் உயிர் இழப்பு அவர்கள் குடும்பத்திற்கு ஏற்படும் பேரிழப்பு என்பதை அனைவரும் யோசித்து பார்க்க வேண்டும்.
சமீபத்தில் கூட ஒரு பேருந்து விபத்து ஏற்பட்டது. என்னை பொருத்தவரை இந்த படம் ஒரு 2 வாரங்கள் முன்னால் வந்திருந்தால் கண்டிப்பாக அந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.
சமூக அக்கறை உள்ள கதையை திரையுலகிற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து இருந்தார் சரவணன். அதுதான் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் ஹைலைட்! ”
படத்தின் இயக்குனர் சரவணன் : ” நான் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்தேனோ அது அனைத்தையும் எனது தயாரிப்பாளர் முருகதாஸ் சாரே பேசி விட்டார். படத்தின் பாடல்கள் கதையோடு இருப்பதால் தான் MONTAGE காட்சிகள் கொண்ட பாடல்களாக எடுத்திருக்கிறோம். அதை நீங்கள் படம் பார்க்கும் போது உணர்வீர்கள்”

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எங்கேயும் எப்போதும் – ‘நோ கட்ஸ்’ !
» விமர்சனம்: எங்கேயும் எப்போதும்
» ரூ 2 கோடி வசூலித்த ‘எங்கேயும் எப்போதும்’!
» எங்கேயும் எப்போதும் – திரை விமர்சனம்
» ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விஷால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum