மங்காத்தா
Page 1 of 1
மங்காத்தா
பணத்துக்காக தனிமனிதர்கள் ஆடுகிற ஆட்டங்களே "மங்காத்தா'வின் கதை.
கிரிக்கெட் சூதாட்டத்துக்காக ரூ.500 கோடி கறுப்புப் பணம் மும்பையில் கைமாறும் நேரத்தில் அதை கொள்ளையடிக்கத் திட்டம் போடுகிறது நான்கு பேர் குழு. அந்தக் கும்பலுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார் சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி அஜீத்.
போலீஸ் அதிகாரி அர்ஜுன், பணத்தை இழந்த சூதாட்டப்புள்ளி ஜெயப்ரகாஷ் என இரு தரப்பும் இந்த கும்பலை விரட்ட ரூ. 500 கோடிக்காக நடக்கும் பரபர சேஸிங்காக விரிகிறது "மங்காத்தா'வின் திரைக்கதை.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்ததாலோ, என்னவோ ஒரு சிக்கலான கதையை எடுத்து வந்திருக்கிறார் வெங்கட்பிரபு. அஜீத், ஜெயப்பிரகாஷ், ஜெயப்ரகாஷின் மகளாக வரும் த்ரிஷா, அர்ஜுன் என எல்லோருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இயக்குநருக்கு. இதற்கே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் இன்னும் எத்தனை கேரக்டரோ என பயப்படும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் கேரக்டர்கள் வந்து கொண்டே இருப்பது சற்று அலுப்பு. அதை சாமர்த்தியமாகச் சமாளிக்க முயல்கிறார் வெங்கட் பிரபு.
முழுக்க முழுக்க நெகடிவ்வான ஒரு கதாபாத்திரத்தில் 50-வது படத்தில் நடித்திருப்பதற்காக அஜீத்தைப் பாராட்டலாம். அதிலும் தனி ஹீரோவாக ஹீரோயிசம் பண்ண ஆசைப்படாமல், ஏகப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நடுவில் கதையைக் கெடுக்காமல் வந்து போவதற்காக அஜீத்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
நாற்பது வயது போலீஸ் கேரக்டர் என்பதால் அஜீத்தின் நிஜ தொப்பையும், நரைத்த முடியும் "நச்'சென்று பொருந்திப் போகிறது. நரை பெருகி நிற்கும் லேசான தாடி, எப்போதும் புகையும் சிகரெட் என படம் நெடுக வலம் வருகிறார் மனிதர். வயதுக்கேற்ற மெச்சூரிட்டியுடன், திட்டமிடுதலும், பணத்தின் மேல் உள்ள ஆசையால் எதற்கும் துணிவதுமான அஜீத் கேரக்டர் தமிழ் சினிமாவுக்குப் புதிது. ரொம்ப நாளைக்குப் பின் "தல' திரும்பக் கிடைத்திருக்கிறார். பில்லாவில் அவரே சொல்லுவது போல
"ஐ' ம் பேக்'!
அஜீத்துடன் காதல், அதற்காக ஒரு டூயட், ஏமாற்றத்துக்குப் பின் ஒரு சோகப் பாடல்.. என கதையை விட்டு சீக்கிரமே விலகி விடுகிறார் த்ரிஷா. ஆக்ஷன் பட ஹீரோயின் என்பதால் வேறு ஓன்றும் செய்வதற்கில்லை. அதனால் அவரைப்பற்றி எதுவும் சொல்வதற்கும் இல்லை.
பணம் கிடைத்தவுடன் வெளிநாட்டுக்குச் சென்று நல்ல வாழ்க்கை வாழ ஆசைப்படும் வைபவ் - அஞ்சலி ஜோடி, பணத்துக்காக எதையும் செய்யும் லட்சுமிராய், அர்ஜுன் மனைவியாக வரும் ஆன்ட்ரியா என ஒவ்வொரு கேரக்டருக்கும் பெரிய நட்சத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கான எதிர்பார்ப்புகளும் அதிகம்.
அஜீத்துக்கு இணையான கேரக்டர் அர்ஜுனுக்கு. இருவரும் மோதும் காட்சிகள் அனல் + அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரும் எப்போதும் சீரியஸôக இருப்பதால் பிரேம்ஜி மட்டுமே காமெடிக்கு. தனியாளாகச் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.
அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தைப் புரிந்து கொள்ள ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. இவ்வளவு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கையும் கொஞ்சம் பார்த்திருக்கலாம். போலீஸ்காரர் என்று தெரிந்தும் அஜீத்தை ஜெயப்ரகாஷ் சந்தேகப்படாதது, மும்பையில் உள்ள எல்லோரும் தமிழ் பேசுவது, அஜீத்தின் பண வெறிக்குக் காரணமாக எதுவும் சொல்லப்படாதது போன்றவை உறுத்தல்கள். இந்த மாதிரி படத்துக்கு இரண்டு கிளைமாக்ஸ்தான் வைக்க முடியும், அந்த இரண்டுமே இந்தப் படத்தில் வருவதுதான் "மங்காத்தா' ஆட்டம் சுவாரசியம் இழப்பதன் காரணம்.
யுவனின் இசை படத்துக்கு பெரிய பலம். ஷக்தி சரவணனின் ஒளிப்பதிவு மும்பை தாராவி பகுதியில் வர்ணஜாலம் காட்டுகிறது. ஓப்பனிங் "மங்காத்தா...'பாடலில் லட்சுமிராயில் ஆரம்பித்து முழுப் படத்தையே கலர்ஃபுல் திருவிழாவாக ஆக்குகிறது அவரது ஒளிப்பதிவு.
வெகு நாட்களுக்குப் பின் அஜீத்துக்கு "ரேஸ்' வேகத்தில் ஒரு படம்! ரொம்ப எல்லாம் யோசித்து மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆஹா ஓஹோ ரகமும் இல்லை. நோ.. நோ.. ரகமும் இல்லை. ஒரு தடவை பார்க்க ஓ.கே!
தினமணி விமர்சனக் குழு.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அடுத்தடுத்து 2 ஷோ ! : தல டா மங்காத்தா டா! சிம்புவின் ‘மங்காத்தா’ சிலிர்ப்பு
» ‘மங்காத்தா’ அனுஷ்கா!
» மங்காத்தா பாடல்கள்
» மே 1 முதல் மங்காத்தா
» மங்காத்தா சீக்ரெட்
» ‘மங்காத்தா’ அனுஷ்கா!
» மங்காத்தா பாடல்கள்
» மே 1 முதல் மங்காத்தா
» மங்காத்தா சீக்ரெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum