நடிகர் வடிவேலு மனைவிக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்?
Page 1 of 1

காஞ்சிபுரம் மாவட்டம், புஷ்பகிரி பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களை 15 நாட்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும் என 19 பேருக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதில் நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடங்களை மணிமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சிலர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர மாநில விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர்.
அந்த இடங்களில் ஆந்திர மாநில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். நாளடைவில் விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் ஆந்திர மாநில விவசாயிகள் அந்த இடங்களை நடிகர்கள் மற்றும் தனியார்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டனர்.
தற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மனைவி விசாலாட்சி உள்பட 19-க்கும் மேற்பட்ட வெளியூர் பகுதியைச் சேர்ந்த தனியார் சிலர் அரசு புறம்போக்கு இடம் சுமார் 130 ஏக்கரில் தனித்தனியாக மா, தேக்கு மற்றும் தென்னை தோப்புகள் அமைத்து பண்ணை வீடுகளாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புஷ்பகிரி பகுதியில் நடிகர் வடிவேலு மனைவி விசாலாட்சி உள்பட 19 பேர் ஆக்கிரமித்து வைத்துள்ள சுமார் 60 ஹெக்டர் பரப்புள்ள அரசு புறம்போக்கு இடங்களை வரும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என படப்பை வருவாய் துறை ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான வருவாய்த் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
தாமதமான நடவடிக்கை: மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புஷ்பகிரி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு இடங்கள் சுமார் 50 ஆண்டுகளாக ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது தான் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனை 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே வருவாய்த் துறையினர் செய்து இருக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் விவகாரம் : விஷாலுக்கு நடிகர் சங்கம் திடீர் நோட்டீஸ்
» நடிகர் சங்கத்தை அவமதித்ததாக புகார்: நடிகர் குமரிமுத்துக்கு நோட்டீஸ்
» மீண்டும் சிக்கலில் வடிவேலு….மேனேஜர் மர்ம சாவு வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ்!
» அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்
» நடிகர் சங்கத்தை அவமதித்ததாக குமரி முத்துவுக்கு நோட்டீஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum