சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழ்த் திரையுலகம் வலியுறுத்தல்
Page 1 of 1

தில்லியில் மத்திய வருவாய்த் துறைச் செயலரை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் சனிக்கிழமை சந்தித்த தமிழ்த் திரையுலகினர்.
திரைப்படம், சின்னத்திரை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பிரிவினருக்கும் மத்திய அரசு விதித்துள்ள 12.36 சதவீத சேவை வரியை ரத்து செய்யக் கோரி மத்திய வருவாய்த் துறைச் செயலரிடம் தென்னிந்திய திரைப்படத் துறையினர் வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணும் என்று நம்புவதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் 18 பிரதிநிதிகள் மத்திய வருவாய்த் துறை செயலர் சுமித் போஸ், பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான் ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியது:
திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது மத்திய அரசு 12.36 சதவீத சேவை வரியை விதித்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கையை முழுமையாக கேட்ட அவர், இது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவை அறிவிப்பதாகக் கூறினார். மத்திய அரசு நல்ல முடிவை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
திரைப்படத் துறையில் சிலர் மட்டும் செழிப்பாக இருக்கலாம். அதை வைத்து அனைவரும் சேவை வரி செலுத்த வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல.
நலிந்து போகும் துறையாக திரைப்படத் துறை உள்ளது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு இந்த சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை மக்களால் செலுத்த இயலாது. தயாரிப்பாளர்கள்தான் மீண்டும் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஏற்படும். ஆகையால், மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். இதே கோரிக்கையைக் கர்நாடகம், ஆந்திரம் உள்ள அனைத்து திரைப்பட சங்கத்தினரும் எழுப்பி வருகின்றனர் என்று சரத்குமார் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் ராதா ரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், செயலர் பிஎல். தேனப்பன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத்தின் (பெப்ஸி) செயலர் ஜி. சிவகுமார், துணைத் தலைவர் கே.ஆர். செல்வராஜ், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
ப.சிதம்பரத்துடன் சந்திப்பு எப்போது? சேவை வரியை ரத்து செய்யக் கோரி மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினர் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முடிவு செய்தனர்.
ஆனால், மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள காரணத்தால் தமிழ்த் திரைப்படத் துறையினரை அவர் சந்திக்கவில்லை. இது குறித்து சரத்குமாரிடம் கேட்ட போது, ""எங்களை விரைவில் மத்திய நிதியமைச்சர் அழைத்துப் பேசுவார் என்ற நம்பிக்கையுள்ளது'' என்று கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சேவை வரியை ரத்து செய்யக் கோரி 7-ல் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்
» சேவை வரி – ஜன.7 படப்பிடிப்புகள் ரத்து
» சேவை வரி - ஜன.7 படப்பிடிப்புகள் ரத்து
» சேவை வரி - மத்திய அரசுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை
» சேவை வரிக்கு எதிர்ப்பு … ரஜினி, கமல் உள்பட தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum