தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க அரசு விருந்தினராக வரும்படி ரஜினிகாந்துக்கு அழைப்பு

Go down

அமெரிக்க அரசு விருந்தினராக வரும்படி ரஜினிகாந்துக்கு அழைப்பு Empty அமெரிக்க அரசு விருந்தினராக வரும்படி ரஜினிகாந்துக்கு அழைப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:07 pm



ரஜினி அரசு விருந்தினராக அமெரிக்கா வர வேண்டும் என்று அந்நாட்டின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். அத்துடன் மேரிலான்ட் மாகாண கவர்னர் மார்ட்டின் ஓமாலி, ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அதில் ஓமாலி கூறியிருப்பதாவது: "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த துறையில் பல சாதனைகளைச் செய்து, அளவிலா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உலகமெல்லாம் பரவி இருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் வெற்றி பெற எங்கள் மேரிலாண்ட் மாகாண அரசாங்கம் வாழ்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் குறித்து ராஜனிடம், ரஜினி கேட்டறிந்தார். மேரிலாண்ட் அரசின் பிரதிநிதி டாக்டர் ராஜனின் வாழ்த்தையும் அழைப்பையும் ஏற்ற ரஜினி, அமெரிக்காவுக்கு வருவதாக அப்போது உறுதியளித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum