அமெரிக்க அரசு விருந்தினராக வரும்படி ரஜினிகாந்துக்கு அழைப்பு
Page 1 of 1

ரஜினி அமெரிக்காவுக்கு அரசு விருந்தினராக வரவேண்டும் என்று அந்த நாட்டின் மேரிலாண்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேரிலாண்ட் மாகாணத்தின் வெளியுறவு துறை துணை அமைச்சர் டாக்டர் ராஜன் நடராஜன் சென்னையில் ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாகாணத்தின் கவர்னர் மார்ட்டின் ஒமாலி வழங்கிய அழைப்பு கடிதத்தை வழங்கினார். அதனை ரஜினி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
அக்கடிதத்தில் கவர்னர் மார்ட்டின் ஒமாலி குறிப்பிட்டுள்ள வாழ்த்துரையில், இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீங்கள் நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த துறையில் பல சாதனைகள் செய்து அளவில்லா புகழை அடைந்துள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உலகமெல்லாம் பரவி இருக்கும் உங்கள் பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் மேலும் வெற்றி பெற எங்கள் மேரிலாண்ட் மாகாண அரசாங்கம் வாழ்த்துகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இச்சந்திப்பின்போது ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களுக்கு நிகராக ரஜினியின் படங்கள் எப்படி அமெரிக்க மக்களால் பாராட்டப்படுகின்றன என்பதை ராஜன் நடராஜன் விளக்கினார். அமெரிக்க வாழ் தமிழர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் ராஜனிடம் கேட்டார் ரஜினி.
தமிழர்களின் பெருமை நீங்கள். உங்கள் ப்ளட்ஸ்டோன் படத்தை அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். அமெரிக்க தமிழர்கள் மட்டுமின்றி பிறநாட்டினரும் உங்கள் படங்களை ஆர்வத்துடன் பார்க்கின்றனர் என்று ராஜன் தெரிவித்தார். அமெரிக்க அரசியலில் இத்தனை உயரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் தமிழர் டாக்டர் ராஜன் என்பதை அறிந்து ரஜினி வியப்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்.
பின்னர் ராஜன் நிருபர்களிடம் கூறும்போது ரஜினியை அமெரிக்க அரசு விருந்தினராக வரவேற்பதை பெரிய கவுரவமாக கருதுகிறோம் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்க அரசு விருந்தினராக வரும்படி ரஜினிகாந்துக்கு அழைப்பு

» அமெரிக்க அரசு சிறப்பு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு!
» அசினுக்கு அழைப்பு
» மருமகன் தனுஷுக்கு கிடைத்தது மாமா ரஜினிகாந்துக்கு கிடைக்கலையே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum