தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ. முப்பெரும் விழா!

Go down

நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ. முப்பெரும் விழா! Empty நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ. முப்பெரும் விழா!

Post  ishwarya Sat Mar 23, 2013 12:04 pm



சத்யராஜ் -மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்கவைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். வாழ்க்கை சக்கரம்,நூறாவது நாள், புதுமனிதன்,மாமன் மகள் போன்ற படங்கள் உதாரணம். சத்யராஜ் நடித்த சட்டையர் படங்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க அப்படியான ஒரு சமீபத்திய அரசியல் சட்டையர் படமாகவும், சிரிக்க வைக்கவும் தயாராகி வருகிறது நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ.

அமைதிப்படையின் இரண்டாம் பாகம் -நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ. சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகுமணிவண்ணன், வையாபுரி, எம் எஸ் பாஸ்கர், கோமல்ஷர்மா, வர்ஷா, மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற மிகப்பெரிய நடிப்பு பட்டாளம் நடிக்க படம் பெரும்பாலும் கேரளா எல்லைகளில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டு அடுத்த கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

நாகராஜ சோழனின் சிறப்பம்சம் மணிவண்ணனின் இயக்கத்தில் உருவாகும் ஐம்பதாவது படம். தவிர, சத்யராஜின் நடிப்பில் வெளிவரும் இருநூறாவது படம். இதனால் இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டை மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர் வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ்.

ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு, சத்யராஜின் இருநூறாவது பட விழா, மணிவண்ணனின் ஐம்பதாவது பட விழா, என முப்பெரும் விழாவாக சென்னை டிரேட் சென்டரில் வைத்து பிரபல நடிகர் நடிகர்கள் கலந்துகொள்ள பிரமாண்ட விழாவாக விரைவில் நடக்க உள்ளது என தெரிவித்தனர் தயாரிப்பாளர்களான சுரேஷ் காமாட்சி மற்றும் எஸ். ரவிச்சந்திரன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum