தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரையரங்குகளில் விஸ்வரூபம் பட பேனருக்கு தீ வைப்பு: சென்னையில் பரபரப்பு

Go down

திரையரங்குகளில் விஸ்வரூபம் பட பேனருக்கு தீ வைப்பு: சென்னையில் பரபரப்பு Empty திரையரங்குகளில் விஸ்வரூபம் பட பேனருக்கு தீ வைப்பு: சென்னையில் பரபரப்பு

Post  ishwarya Sat Mar 23, 2013 12:02 pm



சென்னை திரையரங்குகளில் விஸ்வரூபம் பட பேனருக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடைக்கால உத்தரவை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 29) இரவு 10 மணிக்கு நீதிபதி கே.வெங்கட்ராமன் பிறப்பித்தார்.

இதனையடுத்து விஸ்வரூபம் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று முதல் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதற்காக திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே கூடத் தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெரும்பாலான திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்படவில்லை. இது குறித்து திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சம் உள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் படத்தை திரையிட முடியாது என்று தெரிவித்தார்.

இதனிடையே சென்னை ஆல்பட் திரையரங்கிற்கு நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த விஸ்வரூபம் திரைப்பட பேனருக்கு தீ வைத்துச் சென்றது. உடனே இந்த தீ அணைக்கப்பட்டதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இதே போல் அண்ணசாலை தேவி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனரும் மர்ம கும்பலால் இன்று காலை தீ வைக்கப்பட்டது. இச்சம்பவங்களால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் 30 திரையரங்குகளில் ‘எந்திரன்’ அமர்க்கள ரிலீஸ்!
» வட இந்தியாவில் 800 திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியீடு!
» காவலன் பட பேனர்கள் அகற்றம்! சென்னையில் பரபரப்பு!
» நாளை 800 திரையரங்குகளில் இந்தியில் வெளியாகும் விஸ்வரூபம்: கமல் மும்பை பயணம்.
» விஸ்வரூபம் படத்தை அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கின்றனர் : கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum