"கடல்' திரைப்படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
Page 1 of 1
"கடல்' திரைப்படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள கடல் திரைப்படத்தில் கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதால், அந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 காட்சிகளை நீக்கக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ். ஜார்ஜியிடம் இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
மணிரத்னம் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்துள்ள கடல் திரைப்படத்தில் கிறிஸ்தவர்களின் மனது புண்படும்படியாக 6 காட்சிகள் உள்ளன. பல இடங்களில் பைபிள் வசனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கிறிஸ்தவ பாதிரியார் பெர்க்மான்ûஸ அவமதிக்கும் வகையிலும் இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் உள்ளன.
எனவே இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் படத்தில் கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் வகையில் உள்ள 6 காட்சிகளை நீக்குவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாதிரியார் வேடத்தில் கைதிகள்: மலையாள படத்துக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
» முஸ்லீம்கள் கடல் கொள்ளையர்களா? - சிங்கம் 2-வுக்கு எதிர்ப்பு
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» கிறிஸ்தவர்கள் இந்தியாவின் இரண்டாம்தரக் குடிமக்களா?
» கடல்
» முஸ்லீம்கள் கடல் கொள்ளையர்களா? - சிங்கம் 2-வுக்கு எதிர்ப்பு
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» கிறிஸ்தவர்கள் இந்தியாவின் இரண்டாம்தரக் குடிமக்களா?
» கடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum