களை மேலாண்மை
Page 1 of 1
களை மேலாண்மை
- களை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர்).
- வறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில்
களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க
உதவும். - அடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.
- அருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.
- கரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.
- பசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.
- ஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.
- கோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.
- கோரையை அழிக்க, அன்னப்பறவையை வயலில் விடலாம்.
- வேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு
செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக்
கட்டுப்படுத்தலாம். - 1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர்
தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும்
கட்டுப்படுத்தலாம். - கோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.
- பார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.
- வயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுயஉதவிக்குழுக்கள் மேலாண்மை
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» நெற்பயிரில் குருத்துப்பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
» பருத்தியில் பூச்சி மேலாண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum