மாறி வரும் அறுவடை நடைமுறைகள்
Page 1 of 1
மாறி வரும் அறுவடை நடைமுறைகள்
சேலை முந்தானையை தலைக்கவசமாக கட்டி, பெண்கள் வரிசையாக நின்று,
கேள்விக்குறி போல் வளைந்த அரிவாளுக்கு இணையாக, வளைந்து நெற்கதிர்களை அறுவடை
செய்த காட்சி, இன்று அபூர்வமாகி விட்டது.
இன்று வயலும், வாழ்க்கையுமான இயற்கை அழகு மறைந்து, இயந்திரத்தோடு இணைந்து விட்டது விவசாயம்.
இடுபொருள் விலை உயர்வுஉரம் விலை அதிகரிப்பு, நெல் விலை குறைவு, விவசாய
பணிக்கான ஆட்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு மானியம்
கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், சென்னை அருகே திருவள்ளூர்
மாவட்டப் பகுதிகளில் உள்ள மொத்த விவசாய நிலங்களில், 55 சதவீத பகுதிகளில்
மட்டுமே தற்போது விவசாயம் நடந்து வருகிறது.
மழை வெள்ள இயற்கை சீற்றத்தால், மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது
அறுவடைக்கு தயாராக இருந்த பகுதிகளில், மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக பல
ஏக்கர் பயிர்கள் சரிந்து வீழ்ந்தன.குறைந்த கூலியால் மறுப்புகுறைவான கூலி
மற்றும் சேறு, சகதியுடன் அறுவடையின் போது பயிர்களின் உதிரியான வைகோல்
“சுனை’ (அரிப்பு) ஆகியவற்றை விரும்பாத கிராமத்தினர் நாற்று நடுதல், அறுவடை
போன்ற விவசாயப் பணிகளுக்கு வருவதில்லை.
இதனால், சில ஆண்டுகளாக நெல் அறுவடைக்கு பெல்ட் இயந்திரங்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு வாடகை ஒரு மணி நேரத்திற்கு 1,600 முதல்
1,800 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சேறு, சகதி கலந்த ஈரமான வயல்களில்
நடக்கும் அறுவடைகளில், இரும்பு கவச சக்கரங்களுடன் கூடிய பெல்ட்
இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவை ராணுவ வாகனம் போல் தடையின்றி முன்னேறிச் சென்று, நெல் அறுவடை
செய்கின்றன. காய்ந்த நிலங்களில் டிராக்டருடன் இணைக்கப்பட்ட இயந்திரம்
மூலமும் அறுவடை செய்யப்படுகின்றன. அவற்றுக்கான வாடகை பெல்ட் இயந்திரங்களை
விட, 200 அல்லது 300 ரூபாய் வரை குறைவு.
இயந்திர அறுவடையால் பணிகள் விரைவாகவும், நெல் மணிகள் வீணாகாமலும்
விவசாயிகளுக்கு கிடைக்கிறது. சராசரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர்
அளவில், இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்து விட முடியும். ஆட்கள் மூலம்
செய்தால் ஒரு நாளாகும். இதனால், விவசாயிகளிடம் இயந்திரப் பணிக்கு வரவேற்பு
அதிகரித்துள்ளது.
எல்லாம் காலத்தின் மாற்றம் தான்!!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அறுவடை பணி ஆட்கள் பற்றாக்குறை: நாமே உருவாகிய ஒரு பிரச்னை
» மாறி மாறி காலில் விழும் லிங்குசாமி-பாலாஜி சக்திவேல்!
» அறுவடை அறுவடை
» உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?
» மஞ்சளுக்கு எளிய அறுவடை இயந்திரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum