தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஞ்ஞானியாக நடிக்க ஆசைப்படுகிறேன் : நடிகர் ஷிவா

Go down

விஞ்ஞானியாக நடிக்க ஆசைப்படுகிறேன் : நடிகர் ஷிவா Empty விஞ்ஞானியாக நடிக்க ஆசைப்படுகிறேன் : நடிகர் ஷிவா

Post  ishwarya Fri Mar 22, 2013 4:58 pm



நடிப்புத் திறமையும், பந்தா இல்லாமல் நடிக்கும் விதமும் தான் நடிகர் ஷிவாவை தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்த விஷயங்களாகும். தனக்கான கதாப்பாத்திரங்களை மிகச் சரியாக தேர்வு செய்வதில் ஷிவாவுக்கு நிகர் ஷிவா தான். கடந்த ஆண்டு வெளியான கலகலப்பு படமும் அதற்கு சரியான உதாரணம்.

தற்போது, சொன்னா புரியாது படம் முடிந்து வெளியாக தயாராக உள்ளது. மேலும், தில்லு முல்லுவில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள தலைப்பிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷிவா.

இப்படி பிசியாக இருக்கும் ஷிவாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அதற்கென்ன உடனே வாருங்கள் என்று கூறிவிட்டார். உடனே விரைந்தோம் அவர் கூறிய ஸ்பாட்டுக்கு.

மகிழ்ச்சியோடு வரவேற்றவரை... இவ்வளவு மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று ஆரம்பித்தோம்.

நான் நடித்து வெளியான படங்களின் வெற்றியும், தற்போது நடித்து வரும் படங்களில் கிடைத்துள்ள நல்ல கதாப்பாத்திரங்களுமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் ஷிவா.

சொன்னா புரியாதா படத்தைப் பற்றிக் கூறுங்களே?

அதில் டப்பிங் கலைஞனாக நான் நடித்துள்ளேன். அதிலும், திருமணமே வேண்டாம் என்று நினைத்திருக்கும் இளைஞன், தனது வாழ்க்கைத் துணையை சந்திப்பதே கதையின் முக்கியக் கரு.

பெண் இயக்குநருடன் வேலை செய்வது பற்றி?

கிருத்திகா உதயநிதி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இதில் எனக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. கிருத்திகா வைத்திருக்கும் கதை நல்ல கதையாக இருந்தது. அதிலும் அவர் திறமையானவர் என்பதால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

தற்போது நீங்கள் நடித்து வரும் வேறு சில படங்கள்?

யா யா மற்றும் தில்லு முல்லு திரைப்படங்களில் நடித்து வருகிறேன். யா யா படத்தில் தன்ஷிகா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்கிறோம். இதனை இயக்குநர் பத்ரி இயக்குகிறார். படத்துக்கான 95 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு படத்தின் பாகம் 2 எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதத்தில் அதுவும் துவங்கிவிடும் என்கிறார்.

எந்தவிதமான கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்த உலகத்தையே காப்பாற்றுவது போன்ற கதாப்பாத்திரம் மற்றும் அறிவியல் விஞ்ஞானி போன்ற கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு அதுபோன்ற வாய்ப்புகளை வழங்க யாரும் முன்வருவதில்லை. பொருக்கி அல்லது ஏமாற்றும் பேர்வழி போன்ற கதாப்பாத்திரங்களே என்னைத் தேடி வருகிறது என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்ற வாழ்த்துக்களுடன் அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டோம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum