நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்
Page 1 of 1
நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்
நெல் பயிரில் கார் பருவத்தில் தாக்கிய குருத்துப் பூச்சிகள் பிசான பருவத்திலும் தாக்க வாய்ப்புள்ளது. ஆரம்பகட்ட நடவடிக்கையின் மூலம் இதன் பாதிப்பை குறைக்கலாம்.
அறுவடையின் போது அடித்தூரை அதிக உயரம் விடாமல் தரையோடு அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடை முடிந்தவுடன் உழவு செய்ய வேண்டும்.இதன் மூலம் குருத்துப்பூச்சி, துங்ரோ வைரஸ் நோயை பரப்பும் பச்சை தத்துப்பூச்சி ஆகியவற்றின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
ஆனைக்கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சியின் வாழ்விடங்களான வரப்புகளை சுற்றியுள்ள களைகள், புல் பூண்டுகளை முற்றிலும் அழித்து விட வேண்டும்.
எட்டு அடிக்கு ஒரு அடி பட்டம் விட்டு வரிசை நடவு அல்லது 25 செ.மீ.,க்கு 25 செ.மீ., இடைவெளி விட்டு செம்மை நெல் சாகுபடி செய்வதன் மூலம் புகையான், இலை சுருட்டுப்புழுக்களின் இன பெருக்கத்தை குறைக்கலாம்.
தழைச்சத்தை பல தடவைகளாக பரிந்துரைப்படி பிரித்து இட வேண்டும்.
அடியுரமாக இடப்படும் தழைச்சத்துடன் வேப்பம் பிண்ணாக்கை கலந்து இட வேண்டும். இதன் மூலம் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதோடு, தழைச்சத்து ஒரே சீராக கிடைத்திட செய்யலாம்.
2 முதல் 3 நாட்கள் நீரை வடித்து வைப்பதன் மூலம் கூண்டுப் புழுவை இறக்க செய்திடலாம்.
அடிக்கடி நீரை வடித்து பாய்ச்சுவதன் மூலம் புகையான் தாக்குதலை தவிர்க்கலாம்.
விளக்கு பொறி, இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்
இவ்வாறு அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் கூறியுள்ளார்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்…
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில யோசனைகள்
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில யோசனைகள்
» மூட்டுப் பூச்சிகள் அகல
» பூச்சிகள் குறைய
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில யோசனைகள்
» பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க சில யோசனைகள்
» மூட்டுப் பூச்சிகள் அகல
» பூச்சிகள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum