செடி முருங்கையில் சாகுபடி
Page 1 of 1
செடி முருங்கையில் சாகுபடி
கரூர் கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:
செடி முருங்கை சாகுபடி செய்ய நவம்பர், டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது.
செடி முருங்கை எல்லா மண் வகையிலும் வளரும். எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது.
மண்ணில் கார அமிலத்தன்மை ஆறு முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
முருங்கை சாகுபடி செய்ய பி.கே.எம்.,1, 2, கே.ம்.,1 ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.
இதற்கு நிலைத்தை நன்கு உழுது செய்து பின் 2.5 மீட்டர் இடைவெளியில் 45:45:45 செ.மீ., நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வ்ணடும்.
குழிகளை ஒருவாரம் ஆறப்போட்டு விட்டு பின் குழி ஒன்றுக்கு நன்கு மக்கிய தொழுஉரம் 15 கிலோ மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.
குழிகளை சுற்றி 60 செ.மீ., அகலத்துக்கு நீர் பாச்சுவதுக்கு வாய்க்கால் அமைக்க வேண்டும்.
குழிகளின் மத்தியில் மூன்று செ.மி., ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும்.
ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்க வேண்டும்.
விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்ற வேண்டும்.
விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
செடி ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் பொட்டாஷ் ஆகிவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
ஆறாவது மாதத்தில் யூரியா மட்டும் ஒரு செடிக்கு 100 கிராம் இட வேண்டும்.
செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் கிள்ளி விட வேண்டும்.
இவ்வாறு செய்தால் பக்க கிளைகள் அதிகம் தோன்றும். இதனால் மகசூல் கிடைக்கும்.
செடி முருங்கையில் பழ ஈக்ககளின் குஞ்சுகள் காயைத்தின்று சேதப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
பென்தியான், டைக்குளோர்வாஸ் மானோகுரோட்டோபாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
மருந்து தெளிப்பதற்கு முன் காய்களை பறித்துவிட வேண்டும். மருந்து தெளித்த பத்து நாட்களுக்கு அறுவடை செய்யக்கூடாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீட்ல பச்சை மிளகாய் செடி போட்டிருக்கீங்களா? இதப்படிங்க!
» வீட்டுத் தோட்டத்தில் கற்றாழை செடி வளர்ப்பு!
» பாக்குத் தோப்பில் ஊடு பயிராக காஃபி செடி
» அடுக்குமாடி குடியிருப்பையும் அழகாக்கும் செடி, கொடிகள்
» கண்ணாடி தொட்டிகளிலும் பசுமையாய் செடி வளர்க்கலாம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum