தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவின் புதிய படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன்

Go down

சூர்யாவின் புதிய படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன் Empty சூர்யாவின் புதிய படத்தை இயக்குகிறார் கௌதம் மேனன்

Post  ishwarya Fri Mar 22, 2013 1:17 pm



சூர்யாவின் அடுத்தப் படத்தை கௌதம் மேனன் இயக்குவது உறுதியாகி உள்ளது.

தற்போது சிங்கம் 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் சூர்யா இந்தப் படத்துக்குப் பிறகு யாருடைய படத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. சூர்யாவின் புதிய படத்திற்கான இயக்குனர் பட்டியலில் லிங்குசாமி, சசிகுமார், கௌதம் மேனன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் கௌதம் மேனனுடனான கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அடுத்ததாக லிங்குசாமியின் படத்தில்தான் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அது உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய வலைதளத்தில விளக்கமளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது : சூர்யாவுடன் புதிய படத்தில் இணைகிறேன். இதற்கான கால்ஷீட்டை சூர்யா கொடுத்துவிட்டார். இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது. இந்தப் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.

இதன் மூலம் சூர்யாவின் அடுத்தப் படத்தை கௌதம் மேனன்தான் இயக்குவார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum