தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்
Page 1 of 1
தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்
காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.
பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும். தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
அமிர்தபாணி/பிஜாம்ரூத்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.
நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;
- காலிபாட்டில் எண்ணிக்கை
(பாதியாக வெட்டப்பட்டவை) - 625
- விதை - 6.3 கிலோ
- வண்டல் மண் - 93.8 கிலோ
- மண்புழுஉரம் - 62.5 கிலோ
- சாம்பல் - 31 கிலோ
- தயாராகும் நாற்றுகள் - 2,00,000
இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.
மூலம்
இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF ,
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்
» தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நாற்றங்கால் தயாரித்தல்
» திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி
» குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு
» அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் மாசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum