தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொந்த படம் எடுக்கிறார் அமீர்! அஜீத்திடம் பேசி வருவதாக தகவல்!!

Go down

சொந்த படம் எடுக்கிறார் அமீர்! அஜீத்திடம் பேசி வருவதாக தகவல்!!  Empty சொந்த படம் எடுக்கிறார் அமீர்! அஜீத்திடம் பேசி வருவதாக தகவல்!!

Post  ishwarya Thu Mar 21, 2013 5:07 pm

ஜெயம்ரவியை இரண்டு வேடங்களில் வைத்து அமீர் இயக்கிய படம் ஆதிபகவன். ஜெயம்ரவி படங்களுக்கு இருக்கிற வியாபாரத்தையும் மீறி 40 கோடி செலவு செய்து படத்தை தயாரித்தனர். ஆனால் படம் நான்கு நாள்கூட ஓடவில்லை. இதனால் படத்தை வாங்கிய பலருக்கு பெரும் நஷ்டமாகி விட்டது. விளைவு, அடுத்து உடனடியாக ஒரு ஹிட் கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று முண்டியடித்து வருகிறார் அமீர். ஆனால், இவரை நம்பி படம் தயாரிக்க கோடம்பாக்கத்தில் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவில்லையாம். அதனால் வேறு வழியில்லாமல், இப்போது தான் இயக்கும் படத்தை தானே தயாரிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்.

ஆனால் அப்படி தான் தயாரித்து இயக்கும் படத்தில் ஒரு பிரபலமான ஹீரோ நடித்தால்தான் தப்பிக்க முடியும் என்று திட்டமிட்டவர், அஜீத்திடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் வலை படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், இதுவரை அவரிடத்தில் எந்த முடிவும் சொல்லவில்லையாம். கதை கேட்பதில்கூட ஆர்வம் காட்டவிலலையாம். படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். அப்புறம் சொல்றேன் என்று மட்டும் பட்டும் படாமலும் பதிலளித்துள்ளாராம். ஆனால் அதற்குள், அடுத்த படத்தை அஜீத்தை வைத்து இயக்குகிறார் அமீர் என்று அவரது தரப்பில் இருந்து வேகமாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum