தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதனை புரிய சாதகம் அருளும் சரஸ்வதிதேவி

Go down

சாதனை புரிய சாதகம் அருளும் சரஸ்வதிதேவி Empty சாதனை புரிய சாதகம் அருளும் சரஸ்வதிதேவி

Post  amma Fri Jan 11, 2013 12:44 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் கூத்தனூர்

கல்விக்கு,
வித்தைக்கு கடவுள் மகா சரஸ்வதி. படைக்கும் தொழிலை செவ்வனே செய்யும்
நான்முகக் கடவுளுக்கு அறிவு ஜீவியாய் இருப்பவள், இந்த புத்தக தாரிணி.
ஒட்டக்கூத்தருக்கும் அவருடைய மகன்வழி பேரனாம் ஒவ்வாத கூத்தருக்கும் நேரில்
தரிசனம் தந்தவள். கம்ப ராமாயணம் ஆக்கிய கம்பருக்கு கொட்டிக் கிழங்கு
சுமந்து வந்து, காட்சி அருளி, அபயம் செய்தவள். அறிவு, கல்வி, ஞானம் ஆகிய
அனைத்து நுட்பங்களுக்கும் ஆதாரம் இந்த அன்னை மகா சரஸ்வதி. இவள் கோயில்
கொண்டுள்ள கூத்தனூர் புண்ணியம் மிகுந்த பூமி. கல்வி கற்கும் ஒவ்வொரு
மாணவனும் இந்தத் தலத்தை வழிபட்டு நிற்பது அவசியம். இதையே புலிப்பாணியார்,

‘‘ஞானமுங் கல்வியுந் நயமுடங்
கூட கற்ற வித்தை நற்பலன்
நல்கி நாநிலத்தே நீடு
வாழ பூந்தோட்ட மரசலாறுரை
ஞான சக்தியடி கூடுவீரே’’


என்றார்.
நாம் கற்ற கல்வி நமக்கு பயன்தர, நல்ல வாழ்வு செம்மையாய் அமைய, அரசலாறு
கரையில் அமைந்த ஞானசக்தியாம் மகா சரஸ்வதி தேவியை சரணம் அடைதல் வேண்டும்
என்கின்றார். இந்தக் கலைவாணியின் வாகனம் அன்னப்பட்சி. அன்னை வாணியை
தொழுமுன் அரசலாற்றில் நீராடல் நன்று. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று
நதிகளின் சங்கமமே இந்த அரசலாறு. இதனை வானோர் தட்சிண திரிவேணி என
வழிபடுகின்றனர்.

‘‘தென்புலத் தொரு திருவேணி
என்போம் - சின்முத்திரை ஏந்தி
நிற்குஞ் ஞானபீடமண்டினால்
வித்தை பல கற்று வித்தகனாய்
மேதினியில் வாழ்வாமே’’


-என்றார்,
பாம்பாட்டி சித்தர். தட்சிணத் திரிவேணி என்பதும் தென்புலத் திரிவேணி
என்பதும் ஒன்றே. சின்முத்திரை தாங்கி ஞானபீடத்தில் நிற்கும் அன்னை
சரஸ்வதியை சிரத்தையுடன் தொழுதால் வித்தைகள் பல கற்பதும், கற்ற வித்தையால்
மேன்மை பெறுவதும் கிட்டும். சிலர் செய்யும் வேலைக்கும் படித்த
படிப்புக்கும் தொடர்பின்றி இருப்பதை பார்த்திருப்போம். இதுபோல நிகழாது
அன்னை தடுத்தாட் கொள்வாள். கங்கை மாதா, சிவபெருமானின் பத்தினி. இவர் சிவனை
விட்டு சிலகாலம் விலகி நிற்க நேரிட்டது. ஏனெனில், தாரகாசுரன் என்ற அசுரன்,
பல கொடுமைகளை தேவர் குலத்திற்கு தர, சிவனும் பார்வதி தேவியை மணந்து, தனது
நெற்றிக்கண் வழி முருகப்பிரானை ஈன்றார். முருகப்பிரான் பின்னர் அசுரனை
கொன்றார்.

அதன்பிறகு சிவபெருமானை கங்கை ஆலிங்கனம் செய்தாள். அப்படி சிவபெருமானை கங்கை மீண்டும் சேர்ந்த தலம் இந்த அரச லாறு கரையுறை தலமே.
சிவனுக்கு
மட்டுமல்ல; இங்குள்ள சரஸ்வதி தேவிக்கும் மூன்று கண்கள். அன்னை மகா
சரஸ்வதியின் மூன்றாவது கண், ஞானம், தேஜஸ், செல்வம், அறிவு போன்ற அனைத்து
செல்வங்களையும் தரவல்லது. ஆடற்கலை, இசைக்கலை, நாடகக் கலை, விஞ்ஞானக் கலை
போன்ற அறுபத்து இரண்டு வகை கலைகளை தரவல்லது என்கின்றார் ஒட்டக்கூத்தர்.

மிகவும்
சாதாரண மனிதனான ஒட்டக்கூத்தர் தமக்கு அன்னை சரஸ்வதி தேவியின்
அனுக்கிரஹத்தால், விக்கிரம சோழனின் பாராட்டும் அவைப் புல வர் என்ற
மேன்மையும் கிட்டியது என்கிறார். தேன்கனி வாக்தேவியான இவர் யோகாசனத்தில்,
வெண்தாமரைப் பூவில் அமர்ந்து ஒரு கரத்தில் அட்சர மாலை ஏந்தியிருக்கிறாள்.
வெண்பட்டுடுத்தி, வீணைதனை வலப்புறம் ஏந்தியிருக்கிறாள். முழுமதியாம்
பௌர்ணமி நாளில், இங்கு ‘ஓம்’ என தானியங் களில் குழந்தைகளை எழுத வைப்பதும்
படிக்க உதவும் அனைத்து பொருட்களையும் வைத்து ஆராதனை செய்வதும் கல்வித்தடை
நீக்கும். எண்ணிய கல்வி கிட்டும். படித்த படிப்புக்கு ஏற்ற உத்யோகம்
சேரும். ஞாபக சக்தி கூடும்.
இதனை அகத்தியர்,

‘‘நினைவாற்றலது மிகுத்து
கற்ற கல்வி தன்னால்
மேன்மையும் தனமும் மிகும்’’


-என்றார்.
புஸ்தகதாரணி என்றும் அன்னைக்கு ஒரு பெயர் உண்டு. இடது கரத்தில் புத்தகத்தை
ஏந்திய இவளை தொழுதுவர, கீர்த்தி கிட்டும். மாறா தனங்கூடும். ரோக
நிவாரணமொரு பிறவி என்னும் பெரும் நோயிலிருந்து விடுபடலாம் என்கிறார்,
போகர்.

‘‘அன்னை மாவாணியை தட்சிண
வேணி கண்டு ஆராதித்து
பாசானத்தைக் கட்டினோம் -
எண்ணிய கருமமது மேலாய்
சேர, சித்தர் நவநவமாம்
நின்றாடும் வண்ணமே பரவச
மீந்தாள் பிரம்மன் பத்னியே’’


-என
கொண்டாடுகின்றார். அன்னை மகா சரஸ்வதி மாதாவை தொழுத பின்னர்தான், நவபாஷாண
சிற்பம் செய்ய எண்பத்தொரு சித்தரும் போகர் தலைமையில் முற்பட்டனர். குறித்த
காலத்தில் உலகு உய்ய வெற்றியும் பெற்றனர். இது பிரம்ம தேவரின் துணைவியார்
மகா சரஸ்வதி மாதா தம் கருணையே என்பதாம். ருத்ரகங்கை என்ற தீர்த்தமே இங்கு
சிறப்பு. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கென்றே, கங்காதேவி உருவாக்கிய
தீர்த்தமிது. மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்றது. இந்த தீர்த்தம்
தேவர்களாலும் போற்றப்படுவது. பிரம்ம தேவனும் சரஸ்வதி தேவியும் மணக்கோலம்
கொண்ட ஞானபூமி. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கொண்டாடும் கோயில் இது. நாமும்
நம் பிறவி பயன் தீர ஒருமுறை சென்று தொழுவோமே! மயிலாடுதுறையிலிருந்து
திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரின் அருகே அரை
கிலோமீட்டர் தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி கோயில் உள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum