மானாவாரி மணிலா சாகுபடி
Page 1 of 1
மானாவாரி மணிலா சாகுபடி
ரகங்கள்
மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்ற மணிலா ரகங்கள் டிஎம்வி 7, விஆர்ஐ 2, டிஎம்வி 2 ஆகும். விதையளவு டிஎம்வி 2, டிஎம்வி 7 ஹெக்டேருக்கு 125 கிலோ மற்றும் விஆர்ஐ 2 ஹெக்டேருக்கு 140 கிலோ விதைகள் பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு திரம் 4 கிராம் அல்லது டிரைகோடர்மா விரிடி 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
பூஞ்சான விதை நேர்த்தி செய்த 24 மணி நேரம் கழித்து 3 பாக்கெட் (600 கிராம்) மணிலா பயிருக்கான ரைசோபியம் கலவையை போதிய அளவு ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதை நேர்த்தி செய்யாவிடில் 10 பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிரை 25 கிலோ மணலுடன் கலந்து விதைப்புக்கு முன் சீராகத் தூவ வேண்டும்.
அடியுரம் அவசியம்
ஹெக்டேருக்கு ஜிப்சம் 200 கிலோ, தழைச்சத்து 10 கிலோ, மணிச்சத்து 10 கிலோ, சாம்பல் சத்து 45 கிலோ அடியுரமிட வேண்டும். மண் ஆய்வு செய்திருந்தால் பரிந்துரைப்படி உரமிட வேண்டும்.
ஹெக்டேருக்கு 200 கிலோ ஜிப்சம் அடியுரமாக கடைசி உழவில் இட வேண்டும். துத்தநாகச் சத்து குறைவாக உள்ள இடங்களில் ஹெக்டேருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை தேவையான மணலுடன் கலந்து அடியுரமாக இட வேண்டும்.
ஹெக்டேருக்கு 12.5 கிலோ மணிலா பயிருக்கான நுண்ணூட்டச் சத்தை 50 கிலோ மணலுடன் கலந்து விதைத்த நிலப்பரப்பின் மேல் சீராகத் தூவ வேண்டும்.
விதைத்து 40 முதல் 50-வது நாளுக்குள் களை எடுக்கும்போது 200 கிலோ ஜிப்சம் இட்டு செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
ஊடு பயிரிடலாம்
மணிலாவில் ஊடுபயிராக உளுந்து, காராமணி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயிரிடலாம்.
இதற்கு ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதுமானது.
கம்பு பயிரை 4 வரிசை மணிலாவுக்கு 1 வரிசை வீதம் சாகுபடி செய்தால் சுருள் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு வேலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சிவகுமார்சிங் தெரிவித்தார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மணிலா சாகுபடி உத்திகள்
» மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

» மானாவாரி கேழ்வரகு சாகுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum