தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

Go down

மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் Empty மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

Post  meenu Tue Mar 19, 2013 5:16 pm

குறைந்து வரும் கம்பு சாகுபடியை அதிகரிக்க மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரவீந்திரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மானாவாரி பருவ விதைப்புக்கு முன்பு கோடை உழவு மிகவும் சிறந்தது.
கோடை உழவின்போது நிலம் முழுவதும் சரிசமமாக இருக்கும்படி ஒரு ஏக்கருக்கு 5000 கிலோ வீதம் பண்ணை எருவினை தூவி, உழவு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 16 கிலோ தழைச்சத்து, 8 கிலோ மணிச்சத்து, 5 கிலோ நுண்ணுரம், 8 பாக்கெட் நுண்ணுயிர் போன்றவற்றை அடியுரமாக இடலாம்.
ஐசிஎம்வி 221, ஐசிஎம்வி 155 போன்ற ரகங்களையோ, தனியார் வீரிய ஒட்டு ரகங்களையோ ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் விதைப்பு செய்தால் போதுமானது.
விதைப்புக்கு முன்பு 10 லிட்டர் நீரில் 1 கிலோ சாதா உப்பினை கரைத்து, அந்த உப்புக்கரைசலில் கம்பு விதைகளை ஊற வைக்கவும்.
இப்படி செய்யும்போது நோய் தாக்கப்பட்ட கம்பு விதைகள் மேலே மிதக்கும்.
பின்னர் மிதக்கின்ற விதைகளை நீக்கிவிட்டு, இதர தரமான விதைகளை சுத்தமாக நீரில் இரண்டு அல்லது மூன்று தடவை கழுவி, நிழலில் உலர்த்தி விதைப்பு செய்யலாம்.
மேலும் 2 சத பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சத சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் கம்பு விதைகளை ஊற வைத்து, அதன் பின்பு 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி கம்பு விதைகளை விதைப்பு செய்யும்போது முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.
கம்பு விதைகளை மானாவாரியாக விதைக்கும்போது 45 செ.மீ. மற்றும் 15 செ.மீ. இடைவெளி இருக்கும்படி விதைப்பு செய்வது நல்லது.
மேலும் காலத்தே களையெடுத்து, அதிகப்படியாக செடிகள் முளைத்திருந்தால், அவற்றை சரியான இடைவெளி விட்டு நீக்கிவிட வேண்டும்.
இப்படி செய்யும்போது பக்கவாட்டில் கிளைகள் ஏற்பட்டு, அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த தேவை ஏற்படும்போது வேம்பு கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum