தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:இஞ்சிக் குழம்பு

Go down

சமையல்:இஞ்சிக் குழம்பு Empty சமையல்:இஞ்சிக் குழம்பு

Post  ishwarya Thu Mar 21, 2013 12:28 pm



அடிக்கடி வயிறு பொருமிக்கிட்டிருக்கா.. அஜீரணத்தால சரியா சாப்பிடக் கூட முடியலன்னு அலுத்து கொள்கிறவர்களுக்காக இதோ காரைக்குடி ஸ்பெஷல் அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி குழம்பு.....

தேவையான பொருட்கள்:

புளி - 2 எலுமிச்சம்பழம் அளவு உருண்டை
இளசான இஞ்சி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெல்லம் - ஒரு சிறிய கட்டி
கடுகு - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* இஞ்சியைக் கழுவி தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

* புளியை வெந்நீரில் ஊறப் போடவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துண்டுகளை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை வறுத்து எடுத்து, அதே கடாயில் காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்.

* வறுத்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துருவல்... இந்த மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.

* சிறிது எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.

* புளியைத் தேவையான தண்­ணீர் விட்டுக் கரைத்து, அதில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

* ஒரு கொதி வந்ததும் வதக்கிய இஞ்சித் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

* அஜீரணம், பித்தத்துக்கு ஏற்ற குழம்பு இது.

* வெங்காயம் சேர்க்காமல் செய்தால் விசேஷ நாட்களிலும் பயன்படுத்தலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum