தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமையல்:வாத்துகறி குழம்பு

Go down

சமையல்:வாத்துகறி குழம்பு Empty சமையல்:வாத்துகறி குழம்பு

Post  ishwarya Thu Mar 21, 2013 11:50 am



வாத்து மிகவும் கொழுப்புதன்மை நிறைந்தது. அதனை தோலுடன்தான் சமைக்கணும். அப்போதான் நல்லாயிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும். சிக்கனே செய்து சாப்பிடுவதற்கு பதில் இம்முறை வாத்தை ட்ரை பண்ணிப் பாருங்க!

தேவையான பொருட்கள்:

வாத்துகறி - 1 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 2
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 10
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
முழுப்பூண்டு - 2
பிரியாணி இலை - 4
புளிக்கரைசல் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
வடகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* வாத்தை மஞ்சள்தூள் சேர்த்து சுத்தம் செய்யவும்.

* புளிக்கரைசலில் உரித்த முழுப்பூண்டு பற்கள், மஞ்சள்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தைப் பொரித்து தனியாக வைத்து, அதே எண்ணெயில் தேங்காயையும் பொன்னிறமாக வறுக்கவும்.

* வடகம்-தேங்காய் மைய அரைத்து கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகுத்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

* வதங்கியதும் புளிக்கரைசலோடு இருக்கும் கறியை ஊற்றி கொதிக்கவிடவும்.

* கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* இந்த குழம்பு புளிப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் புளிப்புக்கேத்த மாதிரி புளியை ஊறவைக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum