வாழைக்காய் குருமா
Page 1 of 1
வாழைக்காய் குருமா
தேவையான பொருள்கள்:
வாழைக்காய் = 2
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி = 2
வெங்காயம்= 2
தக்காளி = 4
தேங்காய் = அரை மூடி
முந்திரி பருப்பு = 5
கசகசா = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
தயிர் = அரை கப்
ஏலக்காய் = 2
பட்டை = 2
கிராம்பு = 2
பிரிஞ்சி இலை = 1
எண்ணெய் = 2 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவிக் கொண்டு காலங்குல துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் நறுக்கவும்.
கசகசா, சீரகம், முந்திரி பருப்பு, சோம்பு இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பிரிஞ்சி இலையை தாளித்துக் கொள்ளவும். இதனோடு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளியையும் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் வாழைக்காயை சேர்த்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து மூடி வேக விடவும். 7 நிமிடம் வெந்தால் போதும். நடுவில் ஓரிரு முறை கிளறி விடவும். இறக்கும் போது புளிக்காத தயிர் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்துப் பறிமாறவும்.
சுவையான வாழைக்காய் குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பூரி, நூடுல்ஸ், பிரட், இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், சமோசா, கட்லெட்ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைக்காய் குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum