தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேங்காய் எண்ணெய்

Go down

தேங்காய் எண்ணெய் Empty தேங்காய் எண்ணெய்

Post  oviya Wed Mar 20, 2013 10:27 pm

மருத்துவக் குணங்கள்:

சமையலுக்கு பல எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தேங்காய் எண்ணெயைஅவற்றில் முதலிடம் பிடித்துள்ளது.
வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை ஆராய்ந்தால் தேங்காய் எண்ணெயின் பயனை பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருவதைக் காணலாம்.
பாரம்பரிய உணவு முறைகளில் தேங்காய் சேர்த்துச் சமைப்பதே பிரதானமாக இன்றும் உள்ளது. 1930-களில் தென் பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பல் மருத்துவரான டாக்டர் வெஸ்டன் பாரம்பரிய உணவுகளையும் அதன் ஆரோக்கிய குணங்களையும் ஆராய்ந்தபோது அவற்றை உண்ணும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததைக் கண்டறிந்தார்.
தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தாலும் மக்கள் திடகாத்திரமாக இருந்தனர். இதுபோல் 1981-லும் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அதிக கொழுப்புச் சத்து கொண்ட தேங்காயைப் பயன்படுத்தும் இந்த மக்களிடம் இதய நோய்க்கான சாத்தியங்கள், இரத்தக் குழாய் கோளாறுகள் எதுவும் காணப்படவில்லை.
தேங்காய் எண்ணெய் இதய நலனுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டுவதில்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை நல்ல விகிதத்தில் கொண்டு செல்கிறது. உடனடியாக உடலுக்குத் தேவைப்படும் சக்தி அளிக்கிறது. தோளில் மினுமினுப்பு, இளமைத் தோற்றம், தைராய்டு செயல்பாடு ஆகியவற்றுக்கும் ஏற்றதாக உள்ளது.
அமெரிக்க சுகாதாரத் துறை கூறியுள்ளபடி, துரித உணவில் பயன்படுத்தப்படும் சிலவகை எண்ணெய்க் கொழுப்புகளே இதயத்திற்கு ஒத்துக்கொள்ளாது. இதய செயல்பாட்டுக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தேங்காய் எண்ணெயில் நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் (“மீடியம் செயின் பேட்டி ஆசிட்ஸ்’) இருப்பதால் அவை இதயத்தைப் பாதிப்பதில்லை என்கிறது அமெரிக்க சுகாதாரத் துறை. ஏனெனில் செரிமானம் ஆவதிலோ உடலில் அதை எடுத்துக் கொள்வதிலோ பிரச்சினை ஏதுமில்லை.
மேலும் “மீடியம் செயின் ‘பேட்டி ஆசிட்ஸ்’-கள் நேரடியாக கல்லீரலுக்கு அனுப்பப்படுகின்றன. அவை உடனே சக்தியாக மாற்றப்படுகிறதே ஒழிய கொழுப்பாக அல்ல. மேலும் தாய்ப்பாலில் உள்ள லாரிக் அமில கூட்டுகள் இதில் கொஞ்சம் உள்ளன.
ஆகவே, தேங்காய் எண்ணெயை சமயலுக்குப் பயன்படுத்துவதில் கொழுப்பு சம்பந்தப்பட்ட பயத்திற்கு இடம் வேண்டாம். அதிலும் டீம் நிறுவனம் புத்தம் புதிய தேங்காயிலிருந்து குளிர் அழுத்த முறையில் மிகவும் சுத்தமான முறையில் தேங்காய் எண்ணெய்யைத் தயாரித்து மக்கள் நலன் கருதி விற்பனை செய்கிறது. ஆரோக்கியத்திற்கு முற்றிலும் உகந்தது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum