கானா வாழை கானா வாழை
Page 1 of 1
கானா வாழை கானா வாழை
மருத்துவக் குணங்கள்:
கானா வாழையின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இது பயிர்களில் களையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை உடையது. இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வளரும் சிறு செடி. இதன் மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும். கீரையை பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் சமைத்துண்ணலாம். விதை மூலம் இன விருத்தியாகிறது.
கானா வாழையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். பாக்கீஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்கப் பயன்படுத்தினர். தொழுநோய் புண்களை சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தினர். தீப்புண் குணமாகவும் இதைப் பயன்படுத்தினர்.
சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும்.
சமூலத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் சுரமும் நீங்கும்.
சமூலத்துடன் அறுகம்புல் சமனாக மைய அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை, மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும்.
சமூலம், அசோகுப் பட்டை, அறுகு சமன் அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும்.
சமூலம், தூதுவாளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும்.
இலையுடன் சம அளவு கீழாநெல்லி மைய அரைத்துத் தயிரில் நெல்லிக்காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும்.
இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப் புண், மார்பு காம்பைச் சுற்றி வரும் புண்கள் தீரும்.
இலையைக் கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வாழைப்பழம் வாழைப்பழம்உலகிலேயே அதிகளவு பயன்படும் பழம் வாழைப்பழம் தான். எங்கேயும் எப்போதும் கிடைக்கும் எளிமையான வாழைப்பழம் ஒரு பரிபூரண உணவு. வாழைப்பழம், வாழைத்தார் (குலை), குலை தள்ளிய வாழை மரம், வாழை இலை இவை இல்லாத கல்யாணமோ, மற்ற மங்கல நிகழ்ச்சிகளோ கிடையாது
» வாழை வாழை
» வாழை வாழை
» கானா பாபுவில் 3 கவர்ச்சிகள்!
» வெஸ்டர்ன் ஸ்டைலில் கானா பாடல்: தாஜ்நூர்
» வாழை வாழை
» வாழை வாழை
» கானா பாபுவில் 3 கவர்ச்சிகள்!
» வெஸ்டர்ன் ஸ்டைலில் கானா பாடல்: தாஜ்நூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum