இரவு நேரத்தில் நல்ல நேரம் உண்டா?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
இரவு நேரத்தில் நல்ல நேரம் உண்டா?
தமிழ்.வெப்துனியா.காம்: வட இந்தியாவில் பார்த்தோமானால், இரவு நேரங்களிலும் நல்ல நேரத்தை குறித்துக் கொடுக்கிறார்கள். ராகு, கேது என்று நாம் பஞ்சாங்கத்தில் கொடுப்பது போல, அவர்கள் காலை, மதியம், இரவு என்று இரவு நேரத்தில் கூட நல்ல நேரத்தை குறித்து தருகிறார்கள். திருமணத்தை கூட இரவில் செய்கிறார்கள். இது எப்படி சாத்தியப்படுகிறது. நாம் அதைப்போல செய்வது இல்லையே? ஏன் இந்த வேறுபாடு?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நம்முடைய தமிழர் பாரம்பரியம், பண்பாட்டு ரீதியிலான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, சூரியனுடைய உதயத்தை வைத்துதான் நாம் எதையும் செய்கிறோம். அதற்குப் பிறகு சந்திரனைப் பொறுத்தவரையில் பெளர்ணமி நாளில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திர விழாவிலிருந்து பல விழாக்கள் சங்க காலங்களில் இருந்து சந்திர நாள், முழுமதி நாளில் செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்கள் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சூரியன் இருக்கும் காலம், சூரியன் உதிக்கும் காலம் என்று புதுமனை புகுதலில் இருந்து எல்லாமே நடந்து வருகிறது. பிறகு கல்யாண ஏற்பாடுகள், பந்தக்கால் நடுதல் எல்லாமே சூரியனை பிரதானமாக வைத்தே செய்யப்படுகிறது.
ஆந்திராவைப் பார்த்தீர்களானால், அது சந்திரனுடைய ஆதிக்கத்தில் வரக்கூடிய மாநிலம். இந்த மாநிலத்தில் பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் திருமணத்தை வைத்துக்கொள்வார்கள். இவர்கள் சந்திரனை அடிப்படையாக வைத்துதான் எல்லாம் செய்கிறார்கள். ஆந்திராவில் பல முக்கிய ஜாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அஷ்டமி, நவமி, ஏகாதசி திதியில் எதுவும் செய்யமாட்டார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு மீதி திதிகளில் சந்திரனை அடிப்படையாக வைத்து இரவு நேரங்களில் நல்ல காரியங்களைச் செய்கிறார்கள்.
இங்கு, தமிழ்நாட்டிலும் ஒரு சிலர் பிரம்ம முகூர்த்தத்தில் எல்லாவற்றையும் செய்பவர்கள் இருக்கிறார்கள். பிரம்ம முகூர்த்தம் என்பது கிட்டத்தட்ட வைகறை நேரம், பின் இரவு இரண்டரையில் இருந்து 5 மணிக்குள். அந்த நேரத்தில்தான் ஓசோன் வாயு மண்டலத்தில் இருந்து ஓசோன் வாயு கிடைக்கிறது என்று சொல்வார்கள். அந்த காலகட்டம் புராணப்படியும், ஜோதிடப்படியும் தோஷமற்ற காலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் இங்கேயும் ஒரு சாரார் திதி, நட்சத்திரம், தோஷம் எல்லாம் எதுவும் கிடையாது, அந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுவார்கள் அது உண்மையும் கூட.
ஏனென்றால், அஷ்டமி, நவமி திதி அந்த தினத்தில் இருந்தால் கூட பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒன்றும் கிடையாது. இதை சுக்கிரயோதய நேரம் என்று கூட சொல்லலாம். அந்த நேரத்தில்தான் சுக்ரன் உதித்து வெளிப்பட்டு அதனுடைய கதிர்கள் பூமியின் மீது விழுகிறது. சுக்ரன் சதய தோஷத்திற்கு நிவாரண கிரகம். அதில் அவர்கள் ஒரு வலிமை கிடைத்து செய்யக்கூடிய காரியத்தில் வெற்றி அடைகிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் சந்திரனை அடிப்படையாக வைத்துதான் அனைத்தையும் செய்கிறார்கள். அதில் ஓரையை முக்கியமாகப் பார்க்கிறார்கள்.
அவர்களா? நம்மளா?
அவர்கள் பார்க்கிறார்கள்.
ஓரை சூரியனோடு சம்பந்தப்பட்டதுதானே?
சூரியனும் சம்பந்தப்பட்டது. இருந்தாலும் இரவு நேரத்திற்கு அந்த ஓரையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரவு நேரத்திலும் குரு ஓரை, செவ்வாய் ஓரை, சூரியன் ஓரை இதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதாவது சந்திரனை அடிப்படையாக வைத்து அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். வளர்பிறையில் இரவு நேரங்களில் அதிகமான சுப நிகழ்ச்சிகளை மற்ற மாநிலங்களில் காண முடிகிறது. திருமணத்தில் இருந்து கிரகப் பிரவேசம் வரை அனைத்தையும் அவர்கள் இரவு நேரத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி!
» நேரம் நல்ல நேரம்
» நேரம் நல்ல நேரம்
» நேரம் நல்ல நேரம்
» நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
» நேரம் நல்ல நேரம்
» நேரம் நல்ல நேரம்
» நேரம் நல்ல நேரம்
» நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum