பீஸ் குருமா
Page 1 of 1
பீஸ் குருமா
தேவையான பொருள்கள்:
பச்சை பட்டாணி (உரித்தது) -100கிராம்
வெங்காயம்- 100கிராம்
தக்காளி- 100கிராம்
பச்சை மிளகாய் -2
இஞ்சிபூண்டு பேஸ்ட்- 2டீஸ்பூன்
கரம்மசாலா -கால்ஸ்பூன்
மல்லி,புதினா-சிறிது
தேங்காய் துருவல்-3டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள்- 3டீஸ்பூன்
சோம்புத்தூள் – அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3டேபிள்ஸ்பூன்
நெய் -1டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா நறுக்கி வைக்கவும். தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.
பட்டாணியை அலசி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம்மசாலா போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும், தக்காளி, பச்சை மிள்காய், உப்பு சேர்த்து வதக்கவும். மல்லி, புதினாவும் சேர்த்து வதக்கவும்.
குறிப்பிட்ட மசாலா வகைகள் சேர்த்து வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு மசாலா வாடை அடங்கி கொதி வரட்டும்.
பச்சை பட்டாணி சேர்க்கவும்.
மூடி போட்டு கால்மணி நேரம் வேக விடவும். தண்ணீர் தேவைக்கு சேர்க்கலாம். உப்பு சரி பார்க்கவும்.
பட்டாணி வெந்ததும், அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்க்கவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். ரெடியானவுடன் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது பட்டர் விடவும்.
இதனை ப்ரெட், சப்பாத்தி, பரோட்டா, நாண், இடியப்பம்,ஆப்பம் உடன் பரிமாறலாம். இந்தக்குருமா ஸ்பெஷல் மணம் மல்லித்தூள் தான், கொஞ்சம் அதிகம் சேர்த்தால் கூட அருமையாக இருக்கும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum