பீஸ் குருமா
Page 1 of 1
பீஸ் குருமா
தேவையான பொருள்கள்:
செய்முறை:
- பச்சை பட்டாணி (உரித்தது) -100கிராம்
- வெங்காயம்- 100கிராம்
- தக்காளி- 100கிராம்
- பச்சை மிளகாய் -2
- இஞ்சிபூண்டு பேஸ்ட்- 2டீஸ்பூன்
- கரம்மசாலா -கால்ஸ்பூன்
- மல்லி,புதினா-சிறிது
- தேங்காய் துருவல்-3டேபிள்ஸ்பூன்
- மல்லித்தூள்- 3டீஸ்பூன்
- சோம்புத்தூள் – அரைடீஸ்பூன்
- சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
- மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
- மிளகாய்த்தூள் -1டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 3டேபிள்ஸ்பூன்
- நெய் -1டீஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
செய்முறை:
- வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா நறுக்கி வைக்கவும். தேங்காய் முந்திரி அரைத்து வைக்கவும்.
- பட்டாணியை அலசி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம்மசாலா போட்டு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும், தக்காளி, பச்சை மிள்காய், உப்பு சேர்த்து வதக்கவும். மல்லி, புதினாவும் சேர்த்து வதக்கவும்.
- குறிப்பிட்ட மசாலா வகைகள் சேர்த்து வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு மசாலா வாடை அடங்கி கொதி வரட்டும்.
- பச்சை பட்டாணி சேர்க்கவும்.
- மூடி போட்டு கால்மணி நேரம் வேக விடவும். தண்ணீர் தேவைக்கு சேர்க்கலாம். உப்பு சரி பார்க்கவும்.
- பட்டாணி வெந்ததும், அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்க்கவும். கொதி
வரவும் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும். ரெடியானவுடன் ஒரு டீஸ்பூன்
நெய் அல்லது பட்டர் விடவும். - இதனை ப்ரெட், சப்பாத்தி, பரோட்டா, நாண், இடியப்பம்,ஆப்பம் உடன்
பரிமாறலாம். இந்தக்குருமா ஸ்பெஷல் மணம் மல்லித்தூள் தான், கொஞ்சம் அதிகம்
சேர்த்தால் கூட அருமையாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum