தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவல் பாயசம்

Go down

அவல் பாயசம்  Empty அவல் பாயசம்

Post  oviya Tue Mar 19, 2013 9:03 pm

தேவையான பொருட்கள்:

அவல்
வாழை.
வெல்லம்.
ஏலக்காய்.
முந்திரி.
கிஸ்மிஸ் பழம்

செய்முறை:
அவலை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, கனிந்த வாழைப்பழம் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் சேர்த்து சாப்பிடலாம். மிகுந்த சுவையாக இருக்கும்
மருத்துவக் குணங்கள்:

அவலை குழைய வேக வைத்து உட்கொள்ள கழிச்சல், வயிற்று வலி தீரும்.
அவலில் பாலும், நெய்யும் சேர்த்து உண்ண உடலுக்கு வலிமை உண்டாகும்.
அவலுடன் புளி சேர்த்து உண்டால் பித்த நோய் குணமாகும்.
மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
வாழைப்பழத்தின் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum