டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
Page 1 of 1
டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
பயறு வகைப் பயிர்களில்
கூடுதல் மகசூல் பெற இரு முறை 2 சதம் டிஏபி கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு
தெளிப்பது அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பயறு வகைப் பயிர்கள்:
டிஏபி கரைசல் தயாரிப்பு:
கைத் தெளிப்பான்:
எப்போது தெளிப்பது?:
பயன்கள் என்ன?:
அரசு மானியம்:
கூடுதல் மகசூல் பெற இரு முறை 2 சதம் டிஏபி கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு
தெளிப்பது அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பயறு வகைப் பயிர்கள்:
- கொண்டைக் கடலை, உளுந்து, தட்டைப் பயிறு, அவரை, பாசிப் பயறு, கொள்ளு,
துவரை, சோயா மொச்சை ஆகிய பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் பெரிதும்
அவசியமானது.
டிஏபி கரைசல் தயாரிப்பு:
- டிஏபி கரைசலைப் பயிர்களுக்கு தெளிப்பதைவிட அந்தக் கரைசலைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- சிறிது அளவு மாறினாலும் கரைசல் தெளித்தும் எந்தவிதப் பயனும் கிடைக்காது.
- அளவு கூடினால் பயிர்கள் காய்ந்து விடும் அபாயமும் உள்ளது.
- எனவே, கரைசல் தயாரிப்பில் சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
- ஓர் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரம் போதுமானது.
- 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் இரவில் கரைத்து வைக்க வேண்டும்.
- இரவு நேரத்தில் 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும்.
- காலையில் இந்தக் கரைசலை கலக்காமல் இருக்க வேண்டும்.
- மேல் புறத்தில் தெளிந்திருக்கும் கரைசலைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்தக் கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஏக்கர் செடிக்கு தெளிக்கலாம்.
கைத் தெளிப்பான்:
- டிஏபி கரைசலைத் தெளிக்கும்போது விசைத் தெளிப்பான் பயன்படுத்தக் கூடாது.
- விசைத் தெளிப்பானில் கரைசல் முழுமையாக வெளியேறாது. நுரையே அதிகமாக வரும். எனவே, கைத் தெளிப்பான் பயன்படுத்தியே தெளிக்க வேண்டும்.
- காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் செடி முழுவதும் நனையும் வகையில்
தெளிக்க வேண்டும். வெயில் இருக்கும் தருணத்தில் தெளித்தால் எந்தவிதப்
பயனும் தராது.
எப்போது தெளிப்பது?:
- பயறு வகைப் பயிர்களை நடவு செய்த 30-வது நாளில் ஒரு முறையும், 45-வது நாளில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.
- இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறையும் தெளிக்கலாம்.
பயன்கள் என்ன?:
- பொக்கு காய்கள் வராது.
- பூக்கள் கொட்டாது.
- காய்கள் நன்கு திரட்சியாக வளரும். கூடுதல் மகசூல் பெறலாம்.
- சாதாரணமாக ஒரு ஹெக்டேரில் 620 கிலோ பயறு வகைகள் கிடைத்தால் 2 சதம் டிஏபி தெளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதம் வரை மகசூல் கிடைக்கும்.
அரசு மானியம்:
- டிஏபி தெளிப்புக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திடத்தின் மூலம், அரசு மானியமும் வழங்கப்படுகிறது.
- டிஏபி கரைசல் தயாரிப்புக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படுகிறது. விவசாயி கூடுதலாக ரூ.200 மட்டும் செலவு செய்தால் போதுமானது.
- இதேபோல், டிஏபி தெளிக்கும் பணிக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது.
இந்தப் பணிக்கு 2 ஆள்களைப் பயன்படுத்தினால் கூலியாக ரூ.600 வழங்க
வேண்டியிருக்கும். அதில், 50 சதத்தை அரசே மானியமாக வழங்குகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி
» வாழை சாகுபடிக்கான நிலத்தை தயார் படுத்துதல் எப்படி
» கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி
» கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி
» கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி
» வாழை சாகுபடிக்கான நிலத்தை தயார் படுத்துதல் எப்படி
» கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி
» கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி
» கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum